ரியோ ஒலிம்பிக்கில் 11-ம் தேதி நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை திபா கர்மாகர் பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் "திபா கர்மாகர்" வால்ட் பிரிவில் 8-வது இடத்தை பிடித்தார்.


ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் 4-வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27-வது இடத்தை பிடித்துள்ளார்.


வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தையும், அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகள் மற்றும் பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகள், ஃப்ளோர் பிரிவில் 12.033 புள்ளிகளை பெற்றுள்ளார். 


இதன் மூலம் 11ம் தேதி நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கெற்ற முதல் நபர் என்ற பெருமையை திபா கர்மாகர் பெற்றார். இந்த சாதனையை தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் 


போட்டியிலேயே அவர் செய்திருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.