அவேஷ் கானிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவேஷ் கானை 10 கோடிக்கு வாங்கியது.
அவேஷ் கான் தற்போது கிரிக்கெட் உலகில் முக்கிய கட்டத்தில் உள்ளார். பெங்களூரில் சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2022 ஏலத்தில் அனைவரும் ஆச்சர்யபடும் வகையில் ஆவேஸ் கானின் பெயர் இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை ரூ. 10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த அன்கேப்டு கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பெற்றார் அவேஷ்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!
கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம், மற்ற அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இது ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விலைக்கு அவரை கொண்டு சென்றது. வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆனா ஆவேஸ் சில இந்திய பவுலர்களை விட அதிக விலைக்கு ஏலம் போனார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான T20I தொடருக்கான அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து இந்திய வீரர்களும் கொல்கத்தாவிற்கு வந்தனர். அங்கு, கடந்த ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக இருந்த பந்த், என்னை ஏலத்தில் திரும்ப வாங்க முடியாமல் போனதற்கு, "மன்னிக்கவும்" எனக் கூறி கட்டிப்பிடித்ததாக அவேஷ் கூறினார்.
"எங்கள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கிய பிறகு, நான் ரிஷப்பை சந்தித்தேன், அவர் என்னை கட்டிப்பிடித்து மன்னிப்பு கூறினார். டெல்லி அணியிடம் பெரிய தொகை இல்லை. மற்ற வீரர்களை வாங்க வேண்டிய சூழ்நிலை, எனக்காக 8.75 கோடி வரை ஏலத்தில் எடுக்க முயன்றனர். ஆனால் இறுதியில் லக்னோ அணி ஏலம் எடுத்தது. இது எனக்கு உணர்ச்சிகரமான தருணம், ரிஷப்புடன் எனது பயணம் மிகவும் பெரியது. நாங்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஒன்றாக விளையாடியுள்ளோம், போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம்" என்று கூறினார். மேலும், டிசி-யின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலை "மிஸ்" செய்வதாக ஆவேஷ் கூறினார். உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேஷ் அணிக்காக ஆவேஸ் கான் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2021ல் 7.37 என்ற விகிதத்தில் 16 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவேஷ்.
டெல்லி தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரிஷப் பந்த் (ரூ.16 கோடி), அக்சர் படேல் (ரூ. 9 கோடி), பிருத்வி ஷா (ரூ. 7.5 கோடி) மற்றும் அன்ரிச் நார்ட்ஜே (ரூ. 6.5 கோடி).
IPL 2022 ஏலத்தில் DC-ல் வாங்கப்பட்ட வீரர்கள்:
டேவிட் வார்னர் (ரூ. 6.25 கோடி), மிட்செல் மார்ஷ் (ரூ. 6.50 கோடி), ஷர்துல் தாக்கூர் (ரூ. 10.75 கோடி), முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ. 2 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 2 கோடி), அஷ்வின் ஹெப்பர் (ரூ. 20 லட்சம்), சர்பராஸ் கான். (ரூ. 20 லட்சம்), கமலேஷ் நாகர்கோடி (ரூ. 1.10 கோடி), கே.எஸ்.பாரத் (ரூ. 2 கோடி), மந்தீப் சிங் (ரூ. 1.10 கோடி), கலீல் அகமது (ரூ. 5.25 கோடி), சேத்தன் சகாரியா (ரூ. 4.2 கோடி), யாஷ் துல் (ரூ. 50 லட்சம்), ரிபால் படேல் (ரூ. 20 லட்சம்), ரோவ்மேன் பவல் (ரூ. 2.8 கோடி), பிரவின் துபே (ரூ. 50 லட்சம்), லுங்கி என்கிடி (ரூ. 50 லட்சம்), டிம் சீஃபர்ட் (ரூ. 50 லட்சம்), விக்கி ஆஸ்ட்வால் (ரூ. 20 லட்சம்)
மேலும் படிக்க | ஐபிஎல்: ஒரே அணிக்கு தேர்வான கைகலப்பில் ஈடுபட்ட வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR