பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் தனிப்பட்ட வகையில் மோதிக்கொண்ட நபர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரே அணிக்காக சென்றுள்ளனர். உள்ளூர் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய தீபக்ஹூடா, அந்த அணியின் கேப்டனாக இருந்த க்ருணால் பாண்டியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த அணியில் இருந்து வெளியேறினார். சக வீரர்கள் முன்பு அசிங்கப்படுத்தியதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் எழுப்பிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | IPL: முடிவுக்கு வந்த 3 வீரர்களின் சகாப்தங்கள்
ஆனால், நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் போட்டியில் இருவரையும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 5.25 கோடிக்கு தீபக்ஹூடாவையும், 8.25 கோடிக்கு குருணால் பாண்டியாவையும் அந்த அணி தன்வசப்படுத்தியது. அவர்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து விளையாடும் சூழல் உருவாகியிருப்பதால், மோதல் நீடிக்குமா? அல்லது தணியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேபோல், டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கு தேர்வாகியிருக்கிறார். அவர் பஞ்சாப் அணிக்கு விளையாடியபோது மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. கிரிக்கெட்டின் மாண்பை குலைக்கும் வகையில் அஸ்வின் நடந்து கொண்டதாக பலர் விமர்சித்தாலும், விதிமுறைப்படியே தான் நடந்து கொண்டதாக அஸ்வின் அப்போது விளக்கமளித்தார். ஆனால், இப்போது அஸ்வின் மற்றும் பட்லர் ஆகியோர் ஒரே அணியில் இணைந்து விளையாட உள்ளனர்.
மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 பேர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR