ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் அணி! இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் யார் தெரியுமா?
ICC Test Team Of The Year 2022: ஐசிசி 2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது, அதில் ஒரே ஒரு இந்தியருக்கு மட்டுமே இடம் கிடைத்தது, அதிலும் விராட் கோலி இல்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செவ்வாயன்று 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் XI-ன் நியமிக்கப்பட்டார், அதில் இங்கிலாந்து அணியினர் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் உள்ளனர். பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டர் பாபர் அசமும் அணியில் இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடுமையான கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வருகிறார், 2022 ஐசிசி ஆண்கள் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் அவர் மட்டுமே. 25 வயதான அவர் 12 இன்னிங்ஸிலிருந்து 61.81 சராசரியிலும் 90.90 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 680 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆண்டில் அவர் இரண்டு சதங்களும் நான்கு அரைசதங்களும் அடித்திருந்தார்.
ரிஷப் பந்த் 2022ல் டெஸ்டில் 21 சிக்ஸர்களை அடித்துள்ளார் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கியுள்ளார். ஆறு ஸ்டம்பிங் மற்றும் 23 கேட்சுகளை எடுத்துள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல போட்டிகளை மாற்றிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி டெஸ்ட் லெவன் அணியில் பாட் கம்மின்ஸ் உட்பட நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள், தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா மற்றும் ஆண்டர்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிரேக் பிராத்வைட் ஆகியோர் ஐசிசி அணியில் உள்ளனர்.
மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தானின் பாபர் அசாம் தலைமையிலான ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பெற்ற இரு இந்தியர்கள் ஆவர். 2022ல், ஐயர் 50-ஓவர்களில் இந்தியாவின் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசையில் நங்கூரமாக இருந்தார். பெரும்பாலும் 4வது இடத்தில் விளையாடி வரும் ஐயர், காலண்டர் ஆண்டில் 17 ஆட்டங்களில் விளையாடி 55.69 சராசரியில் 91.52 என்ற விறுவிறுப்பான வேகத்தில் 724 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவின் ODI அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளார். சிராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மிகவும் மேம்பட்ட பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 15 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அணியின் முக்கிய பவுலராக உள்ளார்.
2022 ஐசிசி டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (C), உஸ்மான் கவாஜா, கிரேக் பிராத்வைட், மார்னஸ் லாபுஷாக்னே, பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோவ், ரிஷப் பண்ட் (WC), பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நாதன் லியோன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
2022 ஐசிசி ஒருநாள் அணி: பாபர் அசாம் (C), டிராவிஸ் ஹெட், ஷாய் ஹோப், ஷ்ரேயாஸ் ஐயர், டாம் லாதம் (WC), சிக்கந்தர் ராசா, மெஹிதி ஹசன் மிராஸ், அல்ஜாரி ஜோசப், முகமது சிராஜ், டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் ஜம்பா.
மேலும் படிக்க: IND vs NZ: ரோஹித், கோலி இனி டி20 அணியில் இல்லை? டிராவிட் சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ