IPL தொடரை தொடர்ந்து இந்த கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டது...
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை கொண்டு நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு உலகத் தொடர் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை கொண்டு நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு உலகத் தொடர் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தொடர் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், "பொதுப் பாதுகாப்பின் நலனுக்காக, மீதமுள்ள போட்டிகளை மறுபரிசீலனை செய்ய அமைப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். நிலைமை உகந்ததாக இருக்கும் என்று கருதம் பட்சத்தில் மீண்டும் இந்த போட்டிகள் நடத்தப்படும்" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகளை அமைப்பாளர்கள் ரத்து செய்து நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்திற்கு மாற்றினர். மேலும் போட்டிகள் வெற்று மைதானங்களில் நடைபெறும் என்றும் முன்னர் முடிவு செய்யப்பட்டது, ஆனால் தற்போது நிலவும் கொரோனா அச்சம் காரணமாக தற்போதைக்கு போட்டிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே மகாராஷ்டிராவில் சனிகிழமை வரை கொரோனா வைரஸ் வழக்குகள் மொத்தம் 19 பதிவாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாவல் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவிலும் உலகெங்கிலும் பல விளையாட்டு நிகழ்வுகள் ரத்து செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முன்னதாக நடைபெறவிருந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர், IPL 2020 தொடர் போன்றவைகளும் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சாலை பாதுகாப்பு உலகத் தொடர் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.