விளையாட்டு செய்திகள்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதற்கிடையில் டிசம்பர் 14 ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி
இதனையடுத்து இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் டிசம்பர் 22 ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் இரண்டு மேட்ச் வின்னிங் வீரர்கள் திடீரென விலகியுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றும். ஆனால் முக்கிய வீரர்கள் விலகி உள்ளத்தால், ரசிகர்கள் இடையே பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.



​​​​மேலும் படிக்க: 2023 Cricket World Cup: இந்த 3 பேரால் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து!


ரோஹித் சர்மாவுக்கு காயம்
இடது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரோஹித் சர்மா பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் கட்டைவிரல் காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில காலம் தேவை என பிசிசிஐ மருத்துவக் குழு அறிவித்துள்ளது. எனவே வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார்.



மேலும் படிக்க: யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!


நவ்தீப் சைனி விலகல்
இது தவிர, வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இப்போது பெங்களூரில் உள்ள என்சிஏவில் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.



இந்திய அணி விவரம்
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.


மேலும் படிக்க: ஐபிஎல் 2023 ஏலத்தில் இவ்வளவு நிபந்தனைகளா? சுவாரஸ்ய தகவல்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ