2023 Cricket World Cup: இந்த 3 பேரால் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து!

2023 ICC Cricket World Cup: இந்த மூன்று வீரர்கள் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை பறித்துவிடுவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது. எதிர் அணியையும் ஒருவித பீதியடைய செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 20, 2022, 03:15 PM IST
  • இந்தியாவுக்கு ஒருநாள் உலகக் கோப்பை 2023 வென்று தரக்கூடிய கேப்டன் தேவை.
  • அச்சமின்றி ஆடக்கூடிய பேட்ஸ்மேனும், புத்திசாலித்தனமான கேப்டனும் அணிக்கு தேவை.
  • பிசிசிஐயின் உயர்மட்ட கவுன்சில் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2023 Cricket World Cup: இந்த 3 பேரால் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து! title=

விளையாட்டு செய்திகள்: தற்போதைய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிசிசிஐயின் உயர்மட்ட கவுன்சில் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி அதாவது நாளை நடைபெறவுள்ளது. அதில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். சமீப காலமாக ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேன் ஆகவும், அதே நேரத்தில் வெற்றி கேப்டனாகவும் அவரால்  எந்த பெரிய மாற்றத்தையும் செய்ய முடியவில்லை, இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரை மனதில் கொண்டு, இந்தியாவுக்கு ஒருநாள் உலகக் கோப்பை 2023 வென்று தரக்கூடிய ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையாக உள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை பறிக்கப்பட்டால், அவரின் இடத்திற்கு இந்த 3 வீரர்கள் வரலாம். இவர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றால், எதிரணி அணியின் பந்துவீச்சாளர்களிடையே ஒருவித பீதி அலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் யார்? அந்த மூன்று வீரர்கள் என்று பார்ப்போம்.

360 டிகிரி சூர்யகுமார் யாதவ்
மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கான போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் சூர்யகுமார் யாதவின் இடம் தற்போது உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது கேப்டன் பதவி மட்டுமே மிஞ்சியுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பதவியேற்றால், இந்திய அணியின் தலைவிதியை மாற்ற முடியும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற அச்சமின்றி ஆடக்கூடிய பேட்ஸ்மேனும், புத்திசாலித்தனமான கேப்டனும் இந்திய அணிக்கு தேவை. அவரது பேட்டிங்கைப் போலவே, சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன்சியிலும் ஆக்ரோஷத்தைக் கொண்டு வருவார். இது இந்திய அணிக்கு பெரிதும் பயனளிக்கும்.

Suryakumar Yadav

மேலும் படிக்க: யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!

அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாவதற்கு மிகப்பெரிய போட்டியாளராக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு ஒருநாள் போட்டித் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கியது. இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி பதவியேற்ற பிறகு, சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விராட் கோலி கேப்டனாவதற்கு வழி தெளிவாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி போன்ற ஆக்ரோஷமான கேப்டன் இந்திய அணிக்கு தேவை.

Virat Kohli

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டி கேப்டனாவதற்கு முக்கிய போட்டியாளராக உள்ளார். ஹர்திக் பாண்டியா சில போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய விதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தனது கேப்டன்சியால் அனைவரையும் தனது ரசிகராக்கிவிட்டார். ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் இந்திய அணி செயல்பட்ட விதம் மகேந்திர சிங் தோனி மற்றும் கபில் தேவ் பாணி காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவிகின்றனர். அவரது தலைமையின் கீழ், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2022 கோப்பையையும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வென்று தந்துள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனானால், அவரால் ஒருநாள் உலகக் கோப்பையையும் இந்தியாவுக்கு பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

Hardik Pandya

மேலும் படிக்க: ஐபிஎல் 2023: 15 வயதில் ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்ற வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News