புதுடில்லி: ரோஹித் ஷர்மாவுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன. தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இன்னும் அங்கு சென்று இந்திய அணியுடன் இணையவில்லை. இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவில் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் பி.சி.சி.ஐ (BCCI) வீடியோ மூலம் (video conference call) கலந்துரையாடல்  நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து தெரிவித்திருந்த கருத்து வைரலானது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நவம்பர் 29 ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு  பேசியபோது, ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி குறித்து தனக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை என்று கூறினார். உடனே சில மணி நேரங்களில் பிசிசிஐ விளக்கமும் அளித்தது.


Read Also | இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து ICC தலைவர் முக்கிய அறிவிப்பு!


ஐபிஎல் 2020 இல் பங்கேற்ற ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸுக்கு 5 வது பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். இந்த போட்டியில் விளையாடும்போது ரோஹித் ஷர்மா தொடையில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் 'Hitman' ரோஹித் ஷர்மா சேர்க்கப்படவில்லை.  


'மும்பை மிரர்' என்ற ஆங்கில செய்தித்தாளின் அறிக்கையின்படி, BCCI கோலியுடனான பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததாகவும், ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி குறித்த கருத்துக்கள் தொடர்பாக வாரியம் வீடியோ மாநாட்டு அழைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில் டீம் இந்தியா கேப்டன் விராட் கோலி (Virat Kohli), 


பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) மற்றும் ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதியை மேற்பார்வையிடும் தேசிய கிரிக்கெட் அகாடமி (National Cricket Academy (NCA)) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இவர்களுடன், இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷியும் (Sunil Joshi) வீடியோ கான்ஃபிரன்ஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



டிசம்பர் 11 ஆம் தேதி ரோஹித் ஷர்மாவின் உடற்பயிற்சி குறித்து இறுதி மதிப்பீடு செய்யப்படும், அதே நாளில் அவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு செல்வாரா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். ரோஹித் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அவருக்கு சிக்கல்கல் முடிந்துவிடாது. டிசம்பர் 31 வரை, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் சர்வதேச விமான சேவை கிடையாது.


எதாவது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு சென்றாலும், கொரோனாவின் தாக்கத்தினால் தனிமைப்படுத்தும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். விதிகளின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேசி தனிமைப்படுத்தப்படும் காலத்தை குறைக்க சவுரவ் கங்குலி (Sourav Ganguly) முயற்சிப்பார். எது எப்படியிருந்தாலும், ரோஹித் அடிலெய்ட் (Adelaide) மற்றும் மெல்போர்ன் (Melbourne) டெஸ்டில் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் ரோஹித் ஷர்மாவுக்கான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


Also Read | இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் Sledging செய்வார்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR