பிபா உலகக்கோப்பை தொடர் கடந்த நவ.20ஆம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக, அதாவது ஒரு பிரிவில் தலா 4 அணிகள் என்ற வீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், தங்கள் பிரிவின்கீழ் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதி, பின்னர் பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 16 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16இல் மோதும். இதன் போட்டிகள் குலுக்கல் முறையில் தீர்மானிகப்படும்.
அடுத்து காலிறுதி, அரையிறுதி என நாக்-அவுட் சுற்றுகளுக்கு பின் வரும் டிச. 18ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து அணிகளும் தலா 1 போட்டிகளை விளையாடிவிட்டன.
இதில்,
அர்ஜென்டீனா அணி, கத்துக்குட்டியாக கருதப்படும் ஆசிய அணிகளுள் ஒன்றான சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது. இந்த அதிர்ச்சி தனிவதற்குள், மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம், ஜெர்மனி தோல்வியைக் கண்டது. பலம்வாய்ந்த அர்ஜென்டீனா, ஜெர்மனி அணிகள் வளர்ந்துவரும் அணிகளிடம் வீழ்ந்தது, இந்த தொடரின் உயிரோட்டத்தை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சவுதி அரேபியா அர்ஜென்டீனாவை வீழ்த்தியது அந்த நாட்டில் பெரிதும் கொண்டாடப்பட்டது. அங்கு ஒருநாள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு, ஒரே ஆட்டம்பாட்டமாக இருந்தது.
ஏனென்றால், இந்த கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய போட்டியாக சவுதி அரேபியா - அர்ஜென்டீனா போட்டி பார்க்கப்படுகிறது. இதனால், அர்ஜெனடீவை வீழ்த்தியதை இத்தனை தூரம் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை.
மேலும், அர்ஜென்டீனா அணி கடைசி 35 போட்டிகளாக தோல்வியே காணாமல், நட்சத்திர வீர்ர மெஸ்ஸியின் தலைமையில் மாஸாக இருந்தது. ஒரே போட்டியில் சமட்டியடியாக அந்த அணியை சவுதி அரேபியா சீர்குலைத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில், அத்தகைய பலம்வாய்ந்த அர்ஜென்டீனா அணியை வீழ்த்தியதற்காக சவுதி அரேபிய அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரச குடும்பம் அறிவித்துள்ளது. அவர்கள் தொடர் முடிந்து கத்தாரில் இருந்து சவுதி வந்த உடன் அவர்களுக்கு அந்த கார்கள் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சௌத்தின் கையால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எம்6 மில்லியன் ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் பரிசாம் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. தனது இரண்டாவது போட்டியில் சவதி அரேபியா அணி, போலந்து நாட்டை இன்று சந்திக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. அர்ஜென்டீனாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற சவுதி அரேபியா அதற்கு முன்னதாக, இதுவரை உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ