IPL 2021 RR vs CSK: CSK முதலில் பேட்டிங்.. டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்..
பிளேஆஃப்களுக்கான தகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவது அவசியம்.
டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரவு 7.30 மணிக்கு சென்னை வீரர்கள் பேட்டிங் செய்ய களம் இறங்குவார்கள்.
RR Vs CSK Dream 11: ஐபிஎல் 2021 சீசனின் 47வது போட்டியில் (Indian Premier League) இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவது அவசியம். மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய போட்டியில் ஆடவுள்ள இரு அணிகளையும் பற்றி பார்த்தால், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றை எட்டியுள்ளது. எனவே இன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதாவது ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் இருக்கலாம். மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு பதிலாக மற்றவருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
இன்று லிவிங்ஸ்டனுக்குப் பதிலாக க்ளென் பிலிப்ஸ் அல்லது டேவிட் மில்லர் வாய்ப்பைப் பெறலாம். மறுபுறம், இன்றைய போட்டியில் ரியான் பரக்கிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் அல்லது சிவம் துபேயை களம் இறக்கலாம்.
தொடர் வெற்றி அவசியம்:
பிளேஆஃப்கான தகுதியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவது மிக அவசியம். பிளேஆஃப்களுக்கான போட்டியில் இருக்க வேண்டுமானால், மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
சிஎஸ்கே முதலிடம், ஆர்ஆர் 7 வது இடம்:
ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் (IPL 2021 Points Table) சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது மற்றும் ஏற்கனவே பிளேஆஃபில் முன்னேறியுள்ளது. சென்னை இதுவரை 11 போட்டிகளில் 9 வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டிகளில் 7 ல் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
ALSO READ | தோனிக்கு 40 வயதாகிவிட்டது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்: ஹாக் அதிரடி
இந்த மாற்றங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடக்கலாம்:
லிவிங்ஸ்டனுக்குப் பதிலாக க்ளென் பிலிப்ஸ் அல்லது டேவிட் மில்லர் ஆடலாம், ரியான் பரக்கிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் அல்லது சிவம் துபேயைக் காணலாம். கிறிஸ் மோரிஸ்க்கு பதிலாக, ஓஷேன் தாமஸ் அணியில் இடம் பெறலாம்.
இரு அணிகளிலும் இந்த 11 பேர் விளையாட வாய்ப்புள்ளது (Team Predictions):
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals): எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (சி/டபிள்யூ), லியாம் லிவிங்ஸ்டன்/டேவிட் மில்லர்/க்ளென் பிலிப்ஸ், மஹிபால் லோமோர், ரியான் பராக்/ஷ்ரேயாஸ் கோபால்/சிவம் துபே, ராகுல் தெவதியா, கிறிஸ் மோரிஸ்/ஓஷேன் தாமஸ், சேத்தன் சகரியா கார்த்திக் தியாகி, முஸ்தபிசுர் ரஹ்மான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings): ரிதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்/ சாம் கர்ரன்.
ALSO READ | சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR