சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!
Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.
Sara Tendulkar, Shubman Gill | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா நேரில் சென்றுள்ளார். அவர் கேலரியில் அமர்ந்து இந்திய அணியை சப்போர்ட் செய்தார். சாரா டெண்டுல்கர் காபா மைதானத்தில் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அடிக்கடி கேமராமேன் போகஸ் செய்து காட்டிய நிலையில், அவரைப் பற்றிய வதந்திகள் மீண்டும் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. சுப்மன் கில்லை பார்ப்பதற்காகவே சாரா டெண்டுல்கர் பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு வந்திருப்பதாக நெட்டிசன்கள் தீப்பொறி ஒன்றை பற்ற வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலிப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், சுப்மன் கில், சாரா டெண்டுல்கர் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர். தங்களைப் பற்றி வரும் வதந்திகள் குறித்து இதுவரை எந்த ஒரு இடத்திலும் அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் சுப்மன்கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் இருந்த வீடியோவும் வெளியானது. அப்போது முதலே சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவர்கள் காதலுக்கு சச்சின் டெண்டுல்கர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் செய்திகள் பரவியது.
மேலும் படிக்க | IND vs AUS: டிராவிஸ் ஹெட்டை தூக்க புதிய ஆயுதம்... இந்திய அணியின் மாஸ்டர் பிளான்
இந்த சூழலில் காபா மைதானத்துக்கு நேரடியாக சென்றிருக்கிறார் சாரா டெண்டுல்கர். அவர் இந்திய அணியை சப்போர்ட் செய்யவே அங்கு சென்றார் என கூறப்பட்டாலும், காதலர் சுப்மன் கில் சிறப்பாக ஆட வேண்டும், அவருக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாரா பிரிஸ்பேனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன்பு விராட் கோலி விளையாடும் போட்டிகளை அனுஷ்கா சர்மா நேரில் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். விராட் கோலி சிறப்பாக விளையாடவும் ஊக்கமளித்தார். அதே ஃபார்முலாவை சாரா டெண்டுல்கர் - சுப்மன் கில் பின்பற்றுவதாக தெரிகிறது.
இதற்கு முன்பும் சுப்மன் கில் எப்போதெல்லாம் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சாரா டெண்டுல்கர் அந்த போட்டியை பார்க்க நேரில் சென்றிருக்கிறார். அதன் தொடர்ச்சி தான் காபா மைதானத்துக்கு அவர் சென்றிருப்பதும் என்கின்றனர் நெட்டிசன்கள். சுப்மன் கில்லை பொறுத்தவரை காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இந்த சூழலில் சாரா டெண்டுல்கரின் வருகை சுப்மன் கில்லுக்கு நல்ல பாசிட்டிவ் சிக்னலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கின்றன. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கிறது.
மேலும் படிக்க | இந்திய அணியை பொட்டலம் கட்ட ஆஸ்திரேலியா அணியின் மெகா பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ