IND vs SL Sanju Samson Injury : இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் விளையாட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (ஜன. 3) நடைபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று (ஜன. 5) நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் (ஜன. 7) மூன்றாவது போட்டியுடன் டி20 தொடர் நிறைவுபெறும். இதனையடுத்து, ஜன. 10, 12, 15 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. 


மேலும் படிக்க | பைக்கை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் தோனி! வைரலாகும் வீடியோ!


முதல் டி20 போட்டியில், கடைசி வரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியையும் வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. ஆனால், கடந்த போட்டியிலேயே கடுமையான போட்டியை அளித்த இலங்கை அணி, தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உத்வேகத்துடனும் களமிறங்க காத்திருக்கிறது. முதல் டி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. 



இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய அதிரடி வீரரான சஞ்சு சாம்சனுக்கு, இடதுகால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  தொடர்ந்து, ஜித்தேஷ் சர்மாவை மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர் ரஞ்சி மற்றும் முதல்தர போட்டிகளில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர், முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். ஆனால், சஞ்சு சாம்சனின் விலகலால், ராகுல் திரிபாதி தனது முதல் சர்வதேச டி20 போட்டியை இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முதல் போட்டியின்போது, பவுண்டரி லைன் அருகே பந்தை தடுக்க முயன்றபோது சஞ்சு சாம்சனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழுவால் நேற்று பிற்பகல் மும்பையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிபுணர்களின் கருத்துக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவருக்கு ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ