பாகிஸ்தான் சூப்பர் லீக் 2022 துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடிக்கு இன்று (வியாழக்கிழமை) கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியானது. இதை அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். 46 வயதான கிரிக்கெட் வீரர் அப்ரிடி, பிஎஸ்எல் 2022 இல் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் சார்பில் விளையாடுகிறார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான அப்ரிடி, பிசிபியின் நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார் என்றும் அவரது கோவிட் (Covid-19) சான்றிதழ் எதிர்மறையாக வந்த பிறகு அவர் மீண்டும் தனது அணியுடன் இணைவார் என்றும் வட்டாரங்கள் தெரிவிகின்றன. 


குவெட்டா கிளாடியேட்டர்ஸின் ஆரம்ப கட்ட போட்டிகளில் அப்ரிடி பங்கேற்க மாட்டார். லாகூரில் நடக்கும் போட்டிகளில் அவர் அணியுடன் இணையக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 


அஃப்ரிடி, தனிப்பட்ட மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பிஎஸ்எல் சீசனிலிருந்து, விலகிய பிறகு, பிஎஸ்எல் ஏழாவது சீசனின் பயோ பபிளில் மீண்டும் இணைந்தார். செவ்வாய்கிழமை இரவு பயிற்சி அமர்வின் போது முதுகில் வலி ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை காலை மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற அவர் இரவு திரும்பினார்.


தான் குமிழியிலிருந்து வெளியேறியதால், தேவையான மூன்று நாட்களுக்கான தனிமைப்படுத்தலில் இருந்துவிட்டு, க்வேட்டா அணியுடன் இணைவதாகவும் அப்ரிடி தெரிவித்திருந்தார். முன்னதாக, தனிப்பட்ட மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பயோ பபிளிலிருந்து வெளியேற அனுமதி அளிக்குமாறு அவர் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. 


தான் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், தனது மனைவியின் உறவினர் இறந்துவிட்டதாகவும் அப்ரிடி (Shahid Afridi) நிர்வாகத்திடம் கூறியதாக விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த ஆண்டுக்கான பிஎஸ்எல், கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் பி.எஸ்.எல் தான் அப்ரிடியின் இறுதி பி.எஸ்.எல் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.  


ALSO READ | "நேருக்கு நேர் பேசுங்கள்" - ஷாகித் அப்ரிடி கருத்து!


ALSO READ | Omicron தாக்கம் ஓராண்டு இருக்கும், Brain Fog மூளையை பாதிக்கும்: ஆச்சுறுத்தும் புதிய ஆய்வுகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR