Omicron Update: இந்தியாவில் 10,000-ஐ நெருங்கும் ஓமிக்ரான், மொத்த எண்ணிக்கை 9,692-ஐ எட்டியது

வியாழக்கிழமை முதல் ஓமிக்ரான் பாதிப்புகளில் 4.36 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 10:04 AM IST
  • கோவிட்-19-ன் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று அதி வேகமாக உலகில் பரவி வருகின்றது.
  • கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
  • நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்கள் 160.43 கோடியைத் தாண்டியுள்ளன.
Omicron Update: இந்தியாவில் 10,000-ஐ நெருங்கும் ஓமிக்ரான், மொத்த எண்ணிக்கை 9,692-ஐ எட்டியது title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களின் வாழ்க்கையில் நுழைந்தது. இன்னும் இதன் தாக்கம் நம்மை விட்டபாடில்லை. பல்வேறு மாறுபாடுகளுடன் தொடர்ந்து மக்களை இந்த தொற்று அச்சுறுத்தி வருகின்றது. தற்போது கோவிட்-19-ன் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று அதி வேகமாக உலகில் பரவி வருகின்றது.

இதற்கிடையில், கோவிட்-19 (Covid-19) தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் இறந்தனர். இதனுடன் மொத்த இறப்பு எண்ணிக்கையை 4,88,396 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 21, 2022) வெளியிட்ட தகவலில் தெரிவிக்கிறது. சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 20,18,825 ஆக உள்ளது.

சிகிச்சையில் உள்ள கோவிட்-19 கேஸ்லோடில் 24 மணி நேரத்தில் 94,774 பேர் அதிகரித்துள்ளனர். கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 2,51,777 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த மீட்பு எண்ணிக்கை 3,60,58,806 ஆக உள்ளது.

ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ 

சிகிச்சையில் உள்ளவர்களில் எண்ணிக்கை மொத்த தொற்று எண்ணிக்கையில் 5.23 சதவீதத்தை உள்ளடக்கியது. தேசிய கோவிட் -19 மீட்பு விகிதம் 93.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை 9,692 பேர் ஓமிக்ரான் (Omicron Cases) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை முதல் ஓமிக்ரான் பாதிப்புகளில் 4.36 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினசரி நேர்மறை விகிதம் 17.94 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 16.56 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி (Vaccination Drive) செயல்முறையின் கீழ் இதுவரை நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்கள் 160.43 கோடியைத் தாண்டியுள்ளன.

ALSO READ | ஜாக்கிரதை; ஒமிக்ரானின் முக்கிய அறிகுறி, கண்களை பாதிக்குமாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News