இந்தியாவில் இப்போது அதிகம் வேகப்பந்துவீச்சாளர்களை பார்க்க முடிகிறது என தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்டார் பிளேயர் ஷாகித் அப்ரிடி, அதற்கு காரணம் பிசிசிஐ ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பு தான் காரணம். கிரிக்கெட் வீரர்கள் இப்போது அதிகம் கறி சாப்பிட தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு தரமாக இருப்பதற்கு இன்னொரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிகெகட்டில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் கோலோச்சுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்பர் ஒன் பவுலராக முகமது சிராஜ் இருக்கிறார். அவரைப் போலவே ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசுகின்றனர். இவர்களுக்கு அடுத்த வரிசையில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், உள்ளிட்ட இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இதனை குறிப்பிட்டு ஷாகித் அப்ரிடி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 


மேலும் படிக்க | Hardik Pandya Injury: ஹர்திக் பாண்டியாவுக்கும் காயம்..! சிக்கலில் இந்திய அணி


அவர் பேசும்போது, " இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேகப்பந்துவீச்சில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தான் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக சிராஜ் இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையும் இதற்கு ஒரு காரணம். 1.4 பில்லியன் மக்கள் இருப்பதால் தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகிறார்கள். கிரிக்கெட்டின் தரமும் இந்தியாவில் மாறியுள்ளது. ஆரம்ப காலங்களில் இந்தியாவில் சிறந்த பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தானில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.


அதற்காக பாகிஸ்தானில் தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் இந்தியாவில் பந்துவீச்சாளர்கள் சம அளவில் இல்லை என்று கூறவில்லை. ஒப்பீட்டளவில், இந்த எண்ணமே அதிகமாக இருந்தது. கங்குலி கேப்டனாக இருந்தபோது பெரிய மாற்றங்களை இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்தார். அதனை தோனி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். மேலும், இந்தியாவில் முன்னணி வீரர்களாக இருந்த ராகுல் டிராவிட்டை இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர்களாக நியமித்து, அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். இப்போது இந்திய அணியால் 2 பலமான அணிகளைக் கொண்டு விளையாட முடியும். உணவிலும் மாற்றம் வந்துள்ளது. அதிகம் மாமிசம், கறி சாப்பிட தொடங்கியிருக்கிறார்கள். பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனால் தான் தரமான பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார் ஷாகித் அப்ரிடி.  


மேலும் படிக்க | IND vs AFG: டாஸ் வென்ற ஆப்கன்... இந்தியா மீண்டும் சேஸிங் - அஸ்வினுக்கு பதில் முக்கிய வீரர் சேர்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ