இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் ரிஷபன் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.  அவருடைய அதிரடியான ஆட்டம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றவும் காரணமாக அமைந்தது. இந்த போட்டிக்கு பிறகு ரிஷப் பன்டுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்துகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தரும் சூப்பரான அறிவுரை ஒன்றை  ரிஷப் பன்டுக்கு வழங்கி உள்ளார். அவர் எடையை மட்டும் குறைத்தால் ரிஷப் பன்டுக்கு கோடிகளில் பணம் கொட்டும் எனக் கூறியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: பேட் கட்ட மறந்து மைதானத்துக்கு வந்த வீரர்! குலுங்கிச் சிரித்த எதிரணியினர்


இதுகுறித்து தன்னுடைய யூ டியூப் சேனலில் பேசியிருக்கும் அக்தர், " ரிஷப் பன்ட் இப்போது எடை கூடுதலாக இருக்கிறார். அவர் எடையை மட்டும் குறைத்தால் போதும், சிறந்த மாடலாக இருப்பார். இந்தியாவில் மாடலுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. ரிஷப் பன்ட் எடையை குறைத்தால், அவர் மீது பல கோடிகளில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. இதிலும் அவர் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்" எனத் தெரிவித்திருக்கிறார். 


அண்மையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி, தொடரை சமனில் முடித்தது. பின்னர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்ற இந்திய அணி, இரு தொடர்களையும் கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக, ரிஷப் பன்டின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கடைசி ஒருநாள் போட்டியில் 125 ரன்களை விளாசினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்தியா வெற்றி பெற்றது எப்படி? பிக் சீக்ரெட்டை கூறிய சாஹல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ