Shoaib Malik: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடனான விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மத்தியில் நடிகை சனா ஜாவேத் உடன் திருமணம் செய்து கொண்டார்.  இந்த செய்தி வெளியானதில் இருந்து தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.  இந்நிலையில், திருமணம் நடந்த சில மணி நேரங்களில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார் மாலிக். சோயிப் மாலிக் கிரிக்கெட்டில் ஒரு பெரிய சாதனையைப் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) போட்டியில் ரங்பூர் ரைடர்ஸுக்கு எதிரான ஃபார்ச்சூன் பாரிஷலுக்கு இடையேயான போட்டியின் போது அவர் இந்த சாதனையை அடைந்தார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்து மதத்தை பின்பற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்..!


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், ஆனால் டி20 வடிவத்தில் தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுடனான விவாகரத்து பற்றி பல நாட்களாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை சனா ஜாவேத் என்பவரை கராச்சியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார் மாலிக்.



சோயிப் மாலிக் தனது புதிய மனைவியுடன் சமூக ஊடக தளமான Xல் தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  41 வயதான ஷோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா இடையேயான கருத்து வேறுபாடுகள் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த 2022 முதல் வதந்திகள் பரவி வந்தன.  மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களை இருவரையும் ஒன்றாக எங்குமே காண முடியவில்லை.  சில நாட்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்ஸாவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதை நிறுத்தினார்.  இதன் பிறகு இவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை பொது வெளிக்கு வந்தது.  இவர்களது ஐந்து வயது மகன் இசான் சானியாவுடன் வசித்து வருகிறார்.


தற்போது விவாகரத்து நடவடிக்கைகளை சானியா மேற்கொண்டு வருகிறார் என்று சானியா மிர்சா குடும்பம் தெரிவித்துள்ளது.  "இது ஒரு 'குலா'. இதற்கு மேல் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்று அவர்களது தரப்பில் கூறப்பட்டது.  குலா என்பது ஒரு முஸ்லீம் பெண் தன் கணவனை ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமையைக் குறிக்கிறது.  சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா ஏப்ரல் 2010ல் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர், பிறகு அவர்கள் துபாயில் வசித்து வந்தனர். 37 வயதான சானியாவின் சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகளும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கிறது.


மேலும் படிக்க | அஸ்வின் பந்தை போட்டுத் தாக்குவது எப்படி...? இங்கிலாந்துக்கு பீட்டர்சனின் அறிவுரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ