‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்! - HBD-Rohit-Sharma
ரோகித் சர்மாவின் பிறந்த தினத்தில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!
‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோகித் சர்மாவின் பிறந்த நாள் இன்று. இந்த தினத்தில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!
1. ரோகித் சர்மாவுக்கு மொத்தம் 4 மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியுமாம். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மற்றும் தெலுங்கில் அவர் அத்துப்படியாம்.
2. ரோகித் சர்மா உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் தற்போது விளங்கிவருகிறார். ஆனால் அவர் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தது பேட்ஸ்மேனாக அல்ல எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்; ஏனென்றால் அதுதான் உண்மை. முதலில் ஓர் ஆஃப் ஸ்பின்னராகத்தான் அவர் இருந்துள்ளார். ஆனால் அவரது பயிற்சியாளரின் அறிவுரைப்படிதான் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். அதன் பிறகு நடந்தது வரலாறு!
3. அதிரடி தொடக்கவீரராக உள்ள ரோகித் சர்மாவுக்கு முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக் என்றால் ரொம்ப இஷ்டமாம். எந்த அளவுக்கு என்றால், தான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் வகுப்பைக் ‘கட் ’அடித்துவிட்டு ஷேவாக்கைச் சந்திக்கச் செல்லும் அளவுக்கு.
மேலும் படிக்க | சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin
4. ரோகித் சர்மாவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது- தனது உடைமைகளை அவ்வப்போது மறந்துவிடுவது. நிகழ்ச்சியொன்றில் ரோகித் சர்மாவைப் பற்றி பேசிய விராட் கோலி, ரோகித் சர்மா தனது பாஸ்போர்ட்டையே ஒரு முறை மறந்ததாகக் கூறியது இதற்குச் சாட்சி!
5. ஹிட்மேனின் மனைவியான ரித்திகாவுக்கு ஸ்போர்ட்ஸ்மீது ஆர்வமாம். திருமணத்துக்கு முன்பு ரோகித் சர்மாவைப் பயிற்சி ஆட்டங்களில் அவ்வப்போது சந்திப்பது வழக்கமாம்.
6. இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட சில மாதம் கழித்து ஒரு நாளில், போரிவாலி விளையாட்டு மைதானத்தில் வைத்து ரோகித் சர்மா ரித்திகாவிடம் புரொபோஸ் செய்துள்ளார். இந்த மைதானம்தான் அவர் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய மைதானமும்கூட.
7. 2006ஆம் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின்போது தனக்கு 19ஆம் எண் கொண்ட ஜெர்ஸியைக் கேட்ட நிலையில் அது அவருக்குக் கிடைக்கவில்லையாம். கடைசியில் அவரது தாயாருக்குப் பிடித்த 45 என்ற எண்ணை அவர் தேர்வுசெய்துள்ளார்.
8. ரோகித் சர்மா இன்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன். ஆனால் அவருக்கு அவ்வளவு எளிதில் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துவிடவில்லை. திறமை இருந்தபோதும் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இறுதியில் 2013ல் தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதாவது, 100க்கும் மேற்பட்ட ஒடிஐக்களில் விளையாடிய பிறகு.
அந்த வகையில், உலகிலேயே 100க்கும் அதிகமான ஓடிஐக்களில் விளையாடிய பிறகு டெஸ்ட் அணிக்கு வந்த ஒரே நபர் ரோகித் சர்மாதானாம்.
9. ரோகித் சர்மா தனது இளமைக் காலத்தில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியே இருந்துள்ளார். அவரிடம் உள்ள கிரிக்கெட் திறமைகளுக்காகவே அவரது பள்ளி அவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளது.
10. ஆரம்ப காலத்தில், ரோகித் சர்மா கிரிக்கெட்டர் ஆவதில் அவரது தாயாருக்கு உடன்பாடே இல்லையாம். அவர் நன்றாகப் படிக்கவேண்டும் என்றே அவர் கருதியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR