சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin

சச்சின் டெண்டுல்கர் பற்றி இதுவரை தெரியாத சுவாரஸ்யமான 10 தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2022, 06:52 PM IST
  • ‘சாதனை மன்னன்’ சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினம் இன்று.
  • சச்சின் பற்றி இதுவரை தெரியாத சுவாரஸ்யமான 10 தகவல்களை பார்க்கலாம்.
  • சச்சினுக்கு பிடித்த உணவு, முதல் விளம்பரம், முதல் கார் பற்றிய விபரங்கள்
சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin title=

‘சாதனை மன்னன்’ சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினம் இன்று.

சச்சின் டெண்டுல்கர் பற்றி இதுவரை தெரியாத சுவாரஸ்யமான 10 தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். (ஏற்கெனவே இதெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் திரும்பவும் படிக்கலாம்; தப்பு இல்ல)

1. சச்சினுடைய பெயரை இன்று பலருக்கும் சூட்டிவருவதைப் பார்க்கமுடியும். ஆனால் சச்சினுக்கு சச்சின் என்ற பெயரைச் சூட்டியதற்கே இன்னொரு சச்சின்தான் காரணமாம். ஆம், சச்சினின் தந்தைக்குப் பிரபல இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் இசை மிகவும் பிடித்தமாம். அவரது பெயரைத்தான் தனது மகனுக்குச் சூட்டினாராம்.

2. சச்சினிடம் இன்று விதவிதமான ரகங்களில் கார்கள் உள்ளன. அன்பளிப்பாக வந்த கார்களும் கூட உண்டு. ஆனால் அவர் முதன்முதலாக வாங்கிய கார் என்ன தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க. மாருதி-800 கார்தான் அவரது முதல் காராம்.

3. சச்சினுக்கு ‘வடா பாவ்’ ரொம்பவே இஷ்டமாம். மகாராஷ்ட்ராவின் பாப்புலரான உணவு ஐட்டங்களில் ஒன்றான ‘வடா பாவ்’வை தனது மகன் அர்ஜுனுடன் இணைந்து சிவாஜி பார்க் ஜிம்கானாவில் சாப்பிடுவாராம்.

4. தனது பெராரி காரைத் தன்னைத் தவிர வேறு யாரையும் ஓட்டவிடுவதில்லையாம் சச்சின். தனது மனைவி அஞ்சலியைக் கூட அந்தக் காரை ட்ரைவ் செய்ய விடமாட்டாராம் என்றால் பார்த்துக்கோங்களேன்.

5. எவ்வளவோ விளம்பரங்களில் சச்சின் நடித்துப் பார்த்திருப்போம். ஆனால் அவர் முதன்முறையாகத் திரையில் தோன்றியது எந்த விளம்பரம் தெரியுமா? பிளாஸ்திரி விளம்பரம்தானாம். ஆம், ஒட்டும் பிளாஸ்திரிதான் அவரது முதல் விளம்பரமாம். 

                                                                  sachin

மேலும் படிக்க | ‘இந்தியன் 360’க்கு ‘இன்டர்நேஷனல் 360’யிடமிருந்து குவிந்த வாழ்த்து மழை! - அதுவும் இப்படியா!

 

6. மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தைப் பார்க்கத் தியேட்டருக்குச் சென்றாராம் சச்சின். யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது எனும் காரணத்தால் சன் கிளாஸ், ஒட்டுத்தாடி சகிதம் மாறுவேஷத்தில் செல்ல , அவரது கண்ணாடி கீழே விழுந்து ரசிகர்கள் சச்சினை அடையாளம் கண்டுகொண்டார்களாம். கடைசியில் பாதிப் படத்துடனேயே கிளம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் சச்சின்.

7. 1996 ஆம் ஆண்டு வரை சச்சினுடைய பேட்டுக்கு யாரும் ஸ்பான்ஸர் காண்ட்ராக்ட் பேச முன்வரவில்லையாம். 1996 உலகக் கோப்பை முடிந்த பின்னர் பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எஃப் தான் முதன்முதலாக அவரது பேட்டுக்கு ஸ்பான்ஸர் பேசியுள்ளது.

8. சச்சின் பொதுவாக எடை அதிகமான பேட்டுகளை பயன்படுத்துவதே வழக்கம். அவர் பயன்படுத்தும் பேட்டின் எடை 3.2lbs. அதாவது கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ எடையாம்.

9. இளம் வயதில் பாரத ரத்னா விருது பெற்ற நபர் சச்சின்தான். அதேபோல பாரத ரத்னா விருதுபெற்ற ஒரே இந்தியக் கிரிக்கெட் வீரரும் அவரே.

10. சச்சின் முதன்முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். ஆனால் விஷயம் அது கிடையாது. அந்தப் போட்டியில் சச்சின் அணிந்திருந்த பேடு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் அவருக்குப் பரிசாக அளித்ததாம்.

மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News