இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி 40 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில்  இங்கிலாந்து அணியை கரைசேர்க்க போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் (47 ரன்கள்) ரன்-அவுட் செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா பந்தை வீசுவதற்கு முன்பே பவுலிங் முனையில் நின்ற சார்லி டீன் கிரீசை விட்டு சில அடிகள் முன்னோக்கி நகர்ந்ததை கவனித்த தீப்தி ஷர்மா பந்தை வீசாமல் ஸ்டம்பை பந்தால் அடித்து சார்லி டீனை ரன்-அவுட் செய்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். சர்ச்சைக்குரிய 'மன்கட்' முறையில் தீப்தி ஷர்மா ரன்-அவுட் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அதேசமயம் டீனை பலமுறை எச்சரித்ததாகவும் அவர் தொடர்ந்து அவ்வாறு நடந்துகொண்டதால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்ததாகவும் தீப்தி விளக்கமளித்தார்.



இந்நிலையில் இந்த விவகாரம் ஓய்வதற்குள்ளாகவே அடுத்த விவகாரம் ஒன்று கிளம்பியிருக்கிறது. இந்திய வீராங்கனை தானியா பாட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக நாங்கள் லண்டனில் உள்ள ஹோட்டலில் சமீபத்தில் தங்கியிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது அறைக்குள் நுழைந்து, நான் வைத்திருந்த பேக், பணம், கார்டு, நகை மற்றும் வாட்ச்சுகள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டார்.


 



ஹோட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இது போன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ள ஹோட்டலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளித்திருப்பது வியப்பளிக்கிறது. விரைவில் விசாரணை நடத்தி திருட்டு போன எனது பொருள்களை மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | சர்ச்சையாகும் தீப்தி ஷர்மாவின் 'மன்கட்' ரன் அவுட்!


இதற்கு பதிலளித்த ஹோட்டல் நிர்வாகம், “இந்த தகவல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த நாள் மற்றும் விவரங்களை இ-மெயில் மூலம் அனுப்புங்கள்.நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ