இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டது குறித்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த பிரச்சனையை சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என்று அப்ரிடி கூறியுள்ளார்.  இருதரப்பிற்கும் இடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லாத காரணத்தினால் இந்த பிரச்னை பொதுவெளியில் வந்து உள்ளது  என்று தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி!


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருந்தார்.  ஆனால், இதனை கோலி முற்றிலும் மறுத்து இருந்தார். டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலக்கியதாகவும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்  தொடர்ந்து கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறி இருந்தார்.  இருப்பினும், தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் போது கோலியை ODI கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ரோஹித்தை ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக நியமித்தது.



"இந்த பிரச்சனையை சிறந்த முறையில் பிசிசிஐ கையாண்டிருக்கலாம்.  எப்போதும் கிரிக்கெட் வாரியத்தின் பங்கு மிகவும் முக்கியமானது; அது ஒரு தந்தையின் பொறுப்பில் உள்ளது.  ஒரு வீரரைப் பற்றி வாரியத்தின் தேர்வுக் குழு என்ன எதிர்காலத் திட்டங்களை வைத்து இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டால் பிரச்சனைகள் தான் வரும்.  ஒருவருக்கொருவர் முன் அமர்ந்து, நேருக்கு நேர் பேசினால், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் மூலம் ஏதாவது பிரச்சனையை உருவாக்க தான் முடியும், எதையும் தீர்க்க முடியாது என்று அப்ரிடி கூறினார்.


ALSO READ | தென்னாபிரிக்காவில் வரலாற்றை மாற்றி எழுதுமா இந்திய அணி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR