பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி!

விராட் கோலியின் அணுகுமுறை எனக்குப் பிடிக்கும்.  அவர் அணிக்காக அதிகம் போராடுகிறார் என்று கோலியை சவுரவ் கங்குலி பாராட்டி உள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Dec 19, 2021, 05:16 PM IST
பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி! title=

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி நீக்கப்பட்டது குறித்து நடந்து வரும் தொடர் சர்ச்சைக்கு மத்தியில் மைதானத்தில் விராட் கோலியின் அணுகுமுறையை சவுரவ் கங்குலி பாராட்டினார். சிறிது தினங்களுக்கு முன்பு பிசிசிஐ தலைவரும் விராட் கோலியும் பகிரங்கமாக ஒருவருக்கொருவர் நேரடியாக மோதி கொண்டனர்.

ALSO READ | இந்தியாவின் மிகவும் பலமிக்க கேப்டன் கோலி! ஏன்?

குர்கோனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், எந்த வீரர்களின் அணுகுமுறையை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கங்குலி, கோஹ்லியின் பெயரைத் கூறினார். விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு பிடிக்கும், அவர் அணிக்காக அதிகம் போராடுகிறார் என்று கூறினார்.  மேலும் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று கேட்கப்பட்டபோது, ​​​​கிண்டலாக பதில் அளித்த அவர் “வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லை. மனைவியும் காதலியும் மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்" என்று கங்குலி கூறினார்.

ganguly

சமீபத்திய நாட்களில், கோலியும் பிசிசிஐ தலைவரான கங்குலியும் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டனர்.  கோலியின் முடிவைப் பற்றி அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் தான் கோலியிடம் பேசியதாக கங்குலி கூறியிருந்தார்.  ஆனால், இதை கோலி முற்றிலும் மறுத்துள்ளார்.  செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி, "நான் டி20 ஐ கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று பிசிசிஐ-யிடம் கூறியிருந்தேன். அதை எந்த தயக்கமும் இல்லாமல் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.   நான் ODI மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறியிருந்தேன் என்று தெரிவித்தார்.  மேலும் நான் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கபட்டது பற்றி என்னிடம் யாரும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

கோலியின் இந்த கருத்துக்கு, கங்குலியோ அல்லது பிசிசிஐயோ அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை பிசிசிஐ கையாளும் என்றும், இது குறித்து இனி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என்றும் கங்குலி கூறியுள்ளார்.   பிசிசிஐ இந்த விஷத்தை சரியான முறையில் கையாள்வார்கள் என்றும் கங்குலி கூறியுள்ளார்.

ALSO READ | மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News