ரஞ்சி டிராபியின் இந்த சீசனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய எஸ் ஸ்ரீசாந்த் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் தனது ஓய்வை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்திய அணியின் சார்பில் ஆடி, இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரமாக தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார். 


ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட குறிப்பை கீழே காணலாம்:


 “இன்று எனக்கு வருத்தமான நாள். எனினும் இது பிரதிபலிப்பு மற்றும் நன்றியுணர்வின் நாளாக உள்ளது. இசிசி, எர்ணாகுளம் மாவட்ட அணி, பல்வேறு லீக் மற்றும் அணிகள், கேரள மாநில கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, வார்விக்ஷயர் கவுண்டி கிரிக்கெட் அணி, இந்தியன் ஏர்லைன்ஸ் கிரிக்கெட் அணி, பிசிசிஐ மற்றும் ஐசிசி என இவற்றுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். கிரிக்கெட் வீரராக எனது 25 வருட வாழ்க்கையில், போட்டி, ஆர்வம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்துடன் விளையாடி வெற்றியை நான் நாடியுள்ளேன். எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை எப்போதும் பெருமையாக கருதியுள்ளேன். விளையாட்டை விரும்பும் அனைவரையும் நான் விரும்புகிறேன். 



மேலும் படிக்க | ஜடேஜா முதலிடம்! உலகின் நெம்பர் 1 ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா!


மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன்: அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக இந்திய உள்நாட்டு (முதல் வகுப்பு மற்றும் அனைத்து வடிவங்கள்) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் கரியரை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். இது முழுமையாக என்னுடைய முடிவு மட்டுமே. இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயலாக இருக்கும். கிரிக்கெட்டின் ஒவ்வொரு கணத்தையும் நான் நேசித்தேன்." என அவர் எழுதியுள்ளார்.


ஸ்ரீசாந்த் இந்தியாவுக்காக மொத்தம் 90 சர்வதேச போட்டிகளில் விளையாடி 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அவர் 44 ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றார். மாட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாடுகளால் அவரது கிரிக்கெட் வாழ்வில் பெரிய தடை ஏற்பட்டது. ஸ்ரீசாந்த் தனது உணர்வுப்பூர்வமான ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர். 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபிக்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR