Ranji Trophy: 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விக்கெட் - ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி
9 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கும் ஸ்ரீசாந்த், தான் எடுத்த முதல் விக்கெட் வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கியதால் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார். தொடர் சட்டப்போராட்டம் நடத்திய அவருக்கு, நீதிமன்றம் மூலம் பிசிசிஐ விதித்த தடைக்கு விலக்கு கிடைத்தது. இதனையடுத்து தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.
மேலும் படிக்க | கோலியால் ஓரங்கட்டப்பட்ட வீரர் - வாய்ப்பு கொடுக்கும் ரோகித் சர்மா..!
50 லட்சம் ரூபாய் விலைக்கு பதிவு செய்யப்பட்ட அவரின் பெயரை எந்த அணியும் பரிசீலிக்கவில்லை. அதேநேரத்தில் கேரள அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த், மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் கேரள அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் எடுத்த விக்கெட் வீடியோவை அவர் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விக்கெட் எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். ஆனால், துருதிஷ்டவசமாக ஸ்ரீசாந்த் இப்போது காயமடைந்துள்ளார். மத்தியபிரதேச அணிக்கு எதிராக விளையாடுவதற்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீசாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, மத்திய பிரதேச அணிக்கு எதிராக விளையாடும் கேரள அணியில் அவர் இல்லை. காயம் குணமடைந்த பிறகு மீண்டும் களத்துக்கு திரும்ப உள்ளார்.
மேலும் படிக்க | டெஸ்ட் கேப்டனாக ரோஹித்! கோலியின் பங்கு என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR