இலங்கையில் சமீபத்தில் நடந்த அபாயகரமான கார் விபத்து தொடர்பாக இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டார். இவரது முழு பெயர் பலப்புவதுகே குசல் கிம்கான் மென்டிஸ் (Balapuwaduge Kusal Gimhan Mendis) ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ( Sri Lanka) புதன்கிழமை அன்று நிறைவடைந்த, பல்லேகேலே இலங்கையின் குடியிருப்பு பகுதியில் நடந்த பயிற்சி முகாமில் மெண்டிஸ் சமீபத்தில் பங்கேற்றார்.


ALSO READ | புகழ் பெற்றஅமெரிக்க  ராப் பாடகர் Kanye West போட்டியிட தொழில் அதிபர் Elon Musk ஆதரவு


இலங்கையின் (Srilanka) பேட்ஸ்மேன் ஆன  குசல் மென்டிஸ் கொழும்பின் தெற்கே பனதுராவில்  கார் விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


25 வயதான பேட்ஸ்மேன் தனது காரை ஓட்டிச் சென்ற போது, ​​அவரது வாகனம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  64 வயதான நபர் மீது மோதியதில் அவருக்கு படு காயம் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.


பாதிக்கப்பட்டவர் உள்ளூர்வாசி என்றும் மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலத்த காயத்தின் காரணமாக இறந்தார் என்றும் ESPNcricinfo தெரிவித்துள்ளது.


காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் மெண்டிஸ் அடுத்த 48 மணி நேரத்தில் பனாதுரா நீதிமன்ற மேஜிஸ்ரேட் முன் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


விபத்து நடந்த நேரத்தில் மெண்டிஸ் அல்லது பாதிக்கப்பட்டவர் மது போதையில் இருந்தார்களா என்பது இன்னும் அறியப்படவில்லை.


ALSO READ | 2011 World-cup cricket match fixing: இலங்கையில் விசாரணை தொடங்கியது


பல நாடுகளை விட இலங்கையில் கொரோனா தொற்று,  COVID-19 வைரஸ் பரவல் மிகவும் கட்டுபாட்டில் இருந்ததால், அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அப்ல இடங்களில் லாக்டவுன் நீக்கப்பட்டிருந்தது.


இலங்கை கிரிக்கெட் (Cricket)  வீரர் மெண்டிஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளிலும், 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.