சூர்யகுமார் யாதவை பற்றி இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் இப்படி சொல்லிட்டாரே..!
இந்திய அணியின் துருப்புச் சீட்டு சூர்ய குமார் யாதவ் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 20 ஓவர் போட்டியில் விளையாடிய அந்த அணி, இப்போது ஒருநாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என இரண்டு தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இலங்கை தொடரில் இன்னும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி மட்டும் நடைபெற வேண்டும்.
மேலும் படிக்க | கேஎல் ராகுலுக்கு திருமணம்! எப்போது தெரியுமா?
இலங்கை அணியின் இந்திய சுற்றுப் பயணம் குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால், இந்திய அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்தார். குறிப்பாக சூர்யகுமார் யாதவின் ஆட்டம் பிரமாதமாக இருந்ததாக தெரிவித்திருக்கும் அவர், சூர்யகுமார் யாதவால் எந்த பேட்டிங் ஆர்டரிலும் விளையாடக்கூடிய திறமை இருக்கிறது என புகழ்ந்துள்ளார். அவரால் எந்த சூழ்நிலையிலும் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறியிருக்கும் தினேஷ் சண்டிமால், அவரை இந்திய அணி நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் சண்டிமால் பேசும்போது, "இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. சூர்யகுமாரின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அவர் எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. இந்திய அணியின் மிடில் ஆர்டர் துருப்புச் சீட்டே அவர் தான். அவர் எந்த சூழலிலும் எதிரணிக்கு தலைவலியை கொடுத்துவிடுவார். 40..50 ரன்கள் சர்வ சாதாரணமாக அடித்துவிடக்கூடியவர் சூர்யகுமார் யாதவ்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தோனி இடத்தை காலி செய்ய கோலி போட்ட பிளான்; தடுத்த ரவி சாஸ்திரி - பகீர் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ