தோனி இடத்தை காலி செய்ய கோலி போட்ட பிளான்; தடுத்த ரவி சாஸ்திரி - பகீர் தகவல்

தோனியின் கேப்டன் பதவியை காலி செய்ய விராட் கோலி 2016 ஆம் ஆண்டு போட்ட பிளானை ரவி சாஸ்திரி தடுத்தார் என இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புக்கில் பதிவு செய்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 14, 2023, 11:03 AM IST
தோனி இடத்தை காலி செய்ய கோலி போட்ட பிளான்; தடுத்த ரவி சாஸ்திரி - பகீர் தகவல் title=

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தோனி மீது வைத்திருக்கும் அபிமானம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணியில் அறிமுகமான விராட் கோலி படிப்படியாக வாய்ப்புகளை பெற்று இந்திய அணியின் கேப்டனாக உயர்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி, 2017 ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தார். அப்போது முதல் இந்திய அணியின் அனைத்து வடிவிலான அணிக்கும் விராட் கோலியே கேப்டனாக இருந்தார்.

மேலும் படிக்க | Rahul Dravid Health: ராகுல் டிராவிட்டுக்கு உடல்நலக்குறைவு.. ஓய்வு இல்லையா? - காரணம் என்ன?

சில காலம் விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடிய தோனி, பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தோனி கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் முன்பே அவரிடம் இருந்து வெள்ளைப் பந்து அணியின் கேப்டன் பொறுப்பை பெறுவதில் விராட் கோலி மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். 2016 ஆம் ஆண்டே அதற்கான முயற்சிகளை விராட் கோலி எடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கிரிக்கெட் பயிற்சி மற்றும் பயணம் குறித்து எழுதியிருக்கும் புத்தகத்தில், தோனியிடம் இருந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன்சியை பெறுவதில் விராட் கோலி மிகவும் ஆர்வமாக இருந்ததை குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி அதனை தடுத்ததையும் தெரிவித்துள்ளார். " ஒருநாள் மாலை ரவி சாஸ்திரி விராட் கோலியை அழைத்தார். அப்போது விராட் கோலியிடம்.. விராட் அவர் ரெட் பால் கேபடன்சியை கொடுத்தது போலவே வெள்ளைப் பந்து கேப்டன்சியையும் கொடுப்பார். அதுவரை நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். 

அதுவரை என்ன நடந்தாலும் பொறுமையாக இருங்கள். அவரை நீங்கள் இப்போது மதிக்க வேண்டும். இல்லையென்றால் நாளை நீங்கள் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு யாரும் உங்களை மதிக்கமாட்டார்கள். ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். சரியான நேரம் வரும்போது அவர் உங்களிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பார். நீங்கள் அதனை தேடி போக வேண்டாம். கேப்டன்ஷிப் உங்களை தேடி வரும் என்று கூறினார்" என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | Hockey World Cup: தாய் மண்ணில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி

2020 ஆம் ஆண்டு வரை விராட் கோலியின் கேப்டன்சி தலைமையில் இந்திய அணியில் விளையாடிய தோனி, அந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News