IPL: சன்ரைசர்ஸ் அணியை கரை சேர்ப்பாரா நடராஜன்... பந்தயம் அடிக்குமா ராஜஸ்தான்?
SRH vs RR: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் (Qualifiers 2) முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 175 ரன்களை அடித்துள்ளது.
SRH vs RR Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது எனலாம். நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அந்த வகையில், இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் டாஸை வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யாத நிலையில், ஹைதராபாத் அணியில் எய்டன் மார்க்ரம், ஷாபாஸ் அகமது, உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஓப்பனர்களாக களமிறங்கினர்.
திரிபாதி அதிரடியும், அவுட்டும்...
போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே 12 ரன்களை குவித்த அபிஷேக் சர்மா, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் 9 ரன்கள் குவிக்கப்பட்டது. போல்ட் வீசிய 3வது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் அஸ்வின் வீசிய 4வது ஓவரில் 16 ரன்கள் குவிக்கப்பட்ட நிலையில், 5வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலேயே திரிபாதி 10 ரன்களை குவித்து. ஆனாலும் அடுத்த பந்திலேயே திரிபாதி 37(15) ஆட்டமிழந்த நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க |ஐபிஎல் கோப்பையை வென்ற ஜாம்பவான்கள்... அதுவும் தலைமை பயிற்சியாளராக இருந்து...!
இருப்பினும் பவர்பிளேவில் ரன்களும் வந்தன. இதனால் 6 ஓவர்கள் முடிவில் எஸ்ஆர்ஹெச் 3 ஓவர்கள் முடிவில் 68 ரன்களை குவித்தது. ஹெட் கிளாசென் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வந்த நிலையில், சந்தீப் சர்மாவின் ஸ்லோயர் பவுண்சர் பந்தில் டிராவிஸ் ஹெட் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது 10 ஓவர்கள் முடிவில் எஸ்ஆர்ச் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்திருந்தது.
ஃபினிஷிங் மோசம்
ஆனால் அதன்பின் எஸ்ஆர்ஹெச் அணியின் ரன் வேகம் குறைந்தது. 14ஆவது ஓவரில் நிதிஷ் ரெட்டி 5(10), அப்துல் சமத் 0(1) ஆகியோர் ஆட்டமிழக்க ரன் வேகம் மேலும் குறைந்தது. கிளாசென் - ஷாபாஸ் அகமது ஜோடி சேர்ந்து சற்று நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடி 43 ரன்களை சேர்த்தது. கிளாசென் 33 ரன்களில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து 19ஓவது ஓவரின் முதல் பந்திலேயே கிளாசென் 50 ரன்களில் ஆட்டமிழக்க எஸ்ஆர்ஹெச் இன்னும் மோசமான நிலைக்கு சென்றது. எஸ்ஆர்ஹெச் 200 ரன்களை தாண்டும் என நம்பப்பட்ட நிலையில், அது முற்றிலும் தகர்ந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் தலா 6 ஓவர்கள் என 12 ரன்களே குவிக்கப்பட்டது. இதன்மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு எஸ்ஆர்ஹெச் அணி 175 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் போல்ட், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வின், சஹால் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. அந்த வகையில் பார்க்கும் போது, ஸ்லோயர் பந்துகள் பேட்டர்களுக்கு இந்த ஆடுகளத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.எனவே, நடராஜன், உனத்கட், புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், நிதீஷ் ரெட்டி ஆகியோர் நிச்சயம் இதை சரியாக பின்பற்றினால் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது பனியும் இல்லாதது அந்த எஸ்ஆர்ஹெச் அணிக்கு கூடுதல் பலனாகும். ராஜஸ்தான் அணி 4 ஓவர்களில் 24 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ