ஐபிஎல் கோப்பையை வென்ற ஜாம்பவான்கள்... அதுவும் தலைமை பயிற்சியாளராக இருந்து...!

IPL History: ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை தலைமை பயிற்சியாளர்களாக இருந்து கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம். 

  • May 24, 2024, 20:40 PM IST

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளை மறுநாளுடன் இந்த சீசன் நிறைவு பெறுகிறது. 

 

1 /11

ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 16 சீசன்களில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறையும், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணி தலா 1 முறையும் கோப்பையை வென்றன.   

2 /11

அந்த வகையில், இந்த 16 சீசன்களில் கோப்பையை வென்று கொடுத்த அணிகளுக்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் என்றால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர்களை எனலாம். அந்த வகையில், தலைமை பயிற்சியாளர்களாக இருந்து கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை இங்கு காணலாம்.   

3 /11

9. ஆஷிஷ் நெஹ்ரா: 2022ஆம் ஆண்டு குஜராத் டைடன்ஸ் அணி வென்றதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா.   

4 /11

8. மஹேலா ஜெயவர்தனே: மும்பை இந்தியன்ஸ் அணி 2017, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டிகளிலும் கோப்பையை வெல்ல இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்தனே பெரும் பங்காற்றினார்.   

5 /11

7: டாம் மூடி: 2016ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை வெல்ல டேவிட் வார்னர் ஒரு முக்கிய காரணம் என்றால், அந்த அணியின் பயிற்சியாளராக அப்போது செயல்பட்ட டாம் மூடியும் தவிர்க்க முடியாதவர். இவர் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆவார்.   

6 /11

6. ரிக்கி பாண்டிங்: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து பின்னர் பயிற்சியாளராக மாறிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2015இல் அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணியாக இருந்தார்.   

7 /11

5. ஜான் ரைட்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவானான இவர் 2013ஆம் ஆண்டில் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் எனலாம். இந்த ஆண்டில்தான் ரிக்கி பாண்டிங் கேப்டன்ஸியில் இருந்து விலகி ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை பெற்றார்.   

8 /11

4. டிரெவர் பேலிஸ்: 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கம்பீர் கேப்டன்ஸியில் கொல்கத்தா இரண்டு முறை கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய ஜாம்பவான் டிரெவர் பேலிஸ் முக்கிய பங்காற்றினார்.   

9 /11

3. ஸ்டீபன் பிளெமிங்: நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் தான் தோனி தலைமையில் சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஐந்து முறையும் கோப்பையை வெல்ல முதுகெலும்பாக செயல்பட்டவர்.  

10 /11

2. டேரன் லேமன்: ஆஸ்திரேலியா ஜம்பவான இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டபோதே, ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது.   

11 /11

1. ஷேன் வார்னே: 2008ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு ஷேன் வார்னே கோப்பையை முத்தமிட்டார்.