மாஸ் காட்டிய ஹைதராபாத்! தொடர்ந்து 4-வது வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. காயம் காரணமாக கேப்டன் மயங்க் அகர்வால் இந்த போட்டியில் விளையாட வில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க | பஞ்சாப் - ஹைதராபாத் போட்டியில் சர்ச்சையான ரிவ்யூ
ஆரம்பம் முதலே பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர். புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜனின் பவுலிங்கில் பஞ்சாப் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்தது. பஞ்சாப் அணியின் எந்த வீரரும் குறிப்பிடத்தக்க ஸ்கோரை அடிக்காமல் இருக்க, லிவிங்ஸ்டோன் மட்டும் 33 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். வேகத்தில் மிரட்டிய மாலிக் ஒரே ஊரில் மூன்று விக்கெட்கள் மற்றும் ஒரு ரன் அவுட் என 4 விக்கெட்டை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிய இலக்கியத் அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் வில்லியம்சன் மட்டும் 3 ரன்களில் வெளியேற அபிஷேக் சர்மா, நிக்கலஸ் பூரன், ராகுல் திரிபாதி, மார்க்ரம் என மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாட 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை அடித்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2022-ல் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
மேலும் படிக்க | மீண்டும் சிஎஸ்கே அணியில் ரெய்னா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR