விராட் கோலி இடத்தை கன்பார்ம் செய்த மும்பை வீரர்
மோசமான ஃபார்மில் இருக்கும் விராட் கோலிக்கான இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்தாவது டெஸ்டில் தோல்வியடைந்தாலும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், பார்ம் இல்லாமல் தவித்து வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவரை ஏற்கனவே அணியில் இருந்து நீக்கிவிட்டு, பார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. குறிப்பாக, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில்தேவ், விராட் கோலி மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். இதற்கு முன்பு நன்றாக விளையாடினீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மோசமாக விளையாடும்போது தொடர்ந்து வாய்ப்புகள் பெறுவது சரியானதல்ல. அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை அணியில் சேர்ப்பது குறித்து நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அவருடைய கடுமையான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, அணிக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. அணியின் உள்விவகாரங்கள் எங்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார். மேலும், விராட் கோலிக்கு ஆதரவாகவும் பேசினார். இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சூர்யா குமார் யாதவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், ஒருநாள் போட்டியிலும் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் - தவான் ஒப்பனிங் இறங்குவார்கள். விராட்கோலிக்கு பதிலாக சூர்யகுமார் 3வது இடத்தில் இறங்குகிறார்.
மேலும் படிக்க | மிஸ் பண்ணிடீங்களே ரோகித்! ஏங்கும் ரசிகர்கள்
பந்துவீச்சாளர்களில் யுஜ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது ஷமி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா களமிறங்குகின்றனர். முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR