15 ரன்களில் ஆல் அவுட்! RCB-க்கே டப் கொடுத்த அணி!
அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20 கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத குறைந்த ஸ்கோரை பதிவு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 140 ரன்கள் இலக்கை துரத்தும்போது, 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத குறைந்த டீம் ஸ்கோரை சிட்னி தண்டர் பதிவு செய்தது. பிக் பாஷ் லீக் (பிபிஎல்) 2022-23 சீசனின் முதல் வாரத்தில், வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர் 15 ரன்களில் ஆட்டமிழந்ததால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சியில் உள்ளது. இந்த ஸ்கோர் போர்டால் இதுவரை குறைந்த ரன்கள் அடித்து சாதனை பெற்ற மற்ற அணிகளின் சாதனை நொறுங்கி போனது. 2019ல் செக் குடியரசிற்கு எதிராக துருக்கியால் அடிக்கப்பட்ட முந்தைய மோசமான 21 ரன்களை முறியடித்து, டி20 போட்டியில் இதுவரை இல்லாத குறைந்த ரன்கள் சாதனையை பெற்றுள்ளது சிட்னி தண்டர்.
மேலும் படிக்க | 'அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய டிராவிட்
பேட்டிங்கில் பிரெண்டன் டோகெட்டின் 4 ரன்கள் தான் சிட்னியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. ரிலீ ரோசோவ், அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ், ஃபசல்ஹக் ஃபாரூக்கி மற்றும் ஆலிவர் டேவிஸ் போன்ற சில பேட்டர்கள் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். மொத்தம் 5 பேட்டர்கள் டக் அவுட்டாகினர். 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ் சிட்னி அணியில் இருந்துள்ளார். ஆனாலும், 140 என்ற இலக்கைத் துரத்திய போது, 124 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது.
T20 வரலாற்றில் குறைந்த ரன்களின் பட்டியல்:
15 - சிட்னி தண்டர் v அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் (2022)
21 - துருக்கி v செக் குடியரசு, 2019
26 - லெசோதோ v உகாண்டா, 2021
28 - துருக்கி v லக்சம்பர்க், 2019
30 - தாய்லாந்து v மலேசியா, 2022
மேலும் படிக்க | ஒரே போட்டியில் இப்படி ஒரு சாதனையா? இந்திய வீரரின் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ