புதுடெல்லி: 2021 டி 20 உலகக் கோப்பை அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது. அதன்படி டி 20 உலகக் கோப்பை போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வெல்லவும், பாகிஸ்தானுக்கு எதிராக வெல்லவும் இந்தியா ஒரு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி 20 உலகக் கோப்பையில் (T20 worldcup) இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன, அதில் ஐந்து போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த முக்கியமான போட்டியில், இந்தியா தனது வலுவான playing 11 உடன் இறங்கும். அதன்படி அந்த 11 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.


ALSO READ ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா?


கேஎல் ராகுல் மற்றும் மூத்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொக்கஆட்டக்காரர்களாக இருபார்கள். இவர்களது ஜோடி நீண்ட காலமாக இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


அதே நேரத்தில், கேப்டன் விராட் கோலி 3வது இடத்தில் விளையாட வாய்ப்புகள் அதிகம். நான்காவதாக நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கலாம். மேலே தரப்பட்டுள்ள பட்டியலின் அடிபடையில் இந்திய அணி வீரர்கள் அலங்கரிக்கப்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் பெரிய ஸ்கோர் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நடுத்தர வரிசையில் எண் 5 க்கு தனது அணியில் தேர்வு செய்யப்படுவது உறுதி. அதே நேரத்தில், இந்த அணியில் இரண்டு ஆல்ரவுண்டர்களுக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டால் சிறந்தது.


பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ப்ளேயிங் லெவன்
விராட் கோலி (கேப்டன்)
ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
கேஎல் ராகுல்
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
அஷ்வின்
வருண் சக்கரவர்த்தி
ஜஸ்பிரித் பும்ரா
புவனேஸ்வர் குமார்


ALSO READ சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR