டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதலாவதாக இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், அந்த அணியுடன் தான் இந்திய அணி மோத இருக்கிறது. ஆனால், இப்போட்டி மழையால் பாதிகப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் டி20 உலக்கோப்பை போட்டிகள் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸில் இப்போது தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதாவது அரையிறுதிப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், இறுதிப் போட்டியாவது மழை அச்சறுத்தல் இல்லாமல் நடைபெறுமா? என்பது தான் இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே டைட்டில் ஃபைட் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் பார்படாஸில் சனிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கான வாய்ப்பு 78% என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாள்முழுவதும் மேக மூட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாதா? அப்படி நடைபெறாமல் போனால் கோப்பை யாருக்கு கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


இந்த கேள்விகளுக்கும் ஐசிசி பதில் வைத்திருக்கிறது. இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சனிக்கிழமை ஆட்டம் நடைபெறாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறும். இந்தப் போட்டிக்கு ஐசிசி 3 மணி நேரம் 10 நிமிடங்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கியுள்ளது. ஒருவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் பலத்த மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால், கோப்பை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே பகிர்ந்து கொள்ளப்படும். அதாவது இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.


இதுவரை நடைபெற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்றது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஒருநாள், டி20 உள்ளிட்ட எந்த உலக கோப்பைக்கும் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறியது கிடையாது. இந்த முறை முதன்முதலாக இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடனும், இந்தியா இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனும் இருக்கின்றன.


மேலும் படிக்க | Ball Tamper செய்தது வெற்றி... இந்தியாவை குறை சொல்லும் பாகிஸ்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ