இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.  இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்தியா ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் என மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை - ரோகித்ஷர்மா வாய்ப்பு கொடுப்பாரா? எதிர்பார்க்கும் வீரர்


தொடக்கம் முதலே ஸ்ரீலங்கா அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். நிதானமாக ஆடிய விராட் கோலி எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேறினார். பிறகு வழக்கம் போல அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 148 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.  


பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார்.  98 பந்துகளில்  4 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் உட்பட 92 ரன்கள் அடித்திருந்த நிலையில் கடைசியில் ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்ததால் அதிரடியாக ஆடினார்.  இந்த நிலையில் ஜெயவிக்ரமா பந்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  


 



ஸ்ரீலங்கா அணி தரப்பில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்த இந்திய அணி இந்த போட்டியில் அதில் பாதி ரன்களைக் கூட அடிக்கவில்லை, இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்ததாக ஸ்ரீலங்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாட உள்ளது.


மேலும் படிக்க | ப்பா.. என்ன மனுசன்யா இவரு.. 40 வயதில் தல தோனியின் FIT!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR