ஜிம்பாப்வே தொடர்: தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
மேலும் படிக்க | டி20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் திடீர் குண்டு வெடிப்பு! மக்கள் அதிர்ச்சி!
காயத்தில் இருந்து மீண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி முதன்முறையாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியிருந்தது. இப்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், தவான் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை இளம் வீரர்கள் அளித்தனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் அவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜிம்பாப்பே தொடரில் விளையாட பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க | டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
இந்திய அணி வீரர்கள் பட்டியல்: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ