INDVSWI: டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டிலைக் கடந்து ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன் இந்த சாதனையை அடைய ரோஹித்துக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டியில் 64 ரன்கள் அடித்ததன் மூலம் 3443 ரன்களுடன் முதல் இடம் பிடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா வைத்துள்ளார். இந்தியாவுக்காக 129 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா இதுவரை 4 சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக 116 போட்டிகளில் விளையாடியுள்ள மார்ட்டின் குப்டில், இதுவரை 2 சதம், 20 அரைசதம் உட்பட 3399 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் படிக்க | இப்படி ஒரு ரெக்கார்டா? உலக சாதனை படைத்த இந்திய அணி!
விராட் கோலி 99 போட்டிகளில் விளையாடி 3308 ரன்களுடன் சர்வதேச T20 போட்டிகளில் மூன்றாவது அதிக ரன்கள் அடித்த இடத்தில் உள்ளார். ஆனால் அவர் இன்னும் சதம் அடிக்கவில்லை. இருப்பினும், கோலி டி20 போட்டியில் 30 அரைசதங்களை அடித்துள்ளார். மோசமான ஃபார்மில் இருக்கும் கோஹ்லிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. இதற்கிடையில், ஷிகர் தவானின் கீழ் இந்தியா 3-0 என ஒருநாள் தொடரை வென்று இருந்தது. பிறகு, டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார். வெஸ்ட் இண்டீசில் மண்ணில் அந்த அணியை இந்திய அணி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இதுவே முதல் முறை.
விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் அனைத்து வடிவங்களின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் பெற்றுள்ளார். டிசம்பர் 2017ல், இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார் ரோஹித். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லருடன் இந்த சாதனையை சமன் செய்தார். மில்லர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷுக்கு எதிரான T20-ல் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
மேலும் படிக்க | சிறை செல்லும் நெய்மர் - நெருங்கும் சட்டச்சிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ