டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. விறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த சுற்றில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஒரு அணிக்கான அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக இருக்கப்போகின்றன. 6 போட்டிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றில் எஞ்சியிருக்கும் நிலையில், எந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என்று உறுதியாக கூற முடியவில்லை. அந்தளவுக்கு சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது 20 ஓவர் உலக கோப்பை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்' பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு


இந்திய அணியை பொறுத்தவரை கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் எந்த சிக்கலும் இல்லாமல் அரையிறுதிக்கு சென்றுவிடலாம். இல்லையென்றால் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால், பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேசத்தை வென்றால், இந்தியாவுக்கு ஜிம்பாப்வே ஆட்டம் வாழ்வா? சாவா? போட்டியாக மாறிவிடும்.


ரன்ரேட் அடிப்படையில் டாப் 2 இடத்தில் இருக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு முடிவு செய்யப்படும். ஒரு வேலை வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்திவிட்டால் , ஜிம்பாப்வேவிடம் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இதனால், இந்திய அணி கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. அப்படி அரையிறுதிக்கு செல்லும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தால், குரூப் 2வில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியுடன் மோத இருக்கும். ஒருவேளை இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தால் குரூப் 1-ல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியுடன் மோத வேண்டிய சூழல் வரும். அதாவது, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள நேரிடலாம்.


மேலும் படிக்க | பிசிசிஐ என்னை தூக்கி எறிந்தாலும் நான் இதை செய்தேன் - முகமது ஷமி ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ