உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!
T20 Worldcup Squad: ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் மாதம் முதல் நடைபெற உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை இந்திய அணிக்கு எப்படி இருக்கும் என்று பலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் சுற்றில் மிகவும் நம்பிக்கைக்குரிய தொடக்கத்திற்குப் பிறகு, அணி முற்றிலும் தோல்வியடைந்தது. இதனால் உலக கோப்பைக்கு எந்த வீரர்களை தேர்வு செய்வது என்று தற்போது பிசிசிஐ கடும் குழப்பத்தில் உள்ளது. சில முக்கிய வீரர்கள் கூட ஆசிய கோப்பையில் சொதப்பலாக ஆடினர். பும்ரா அணியில் இல்லாதது இந்தியாவிற்கு பெரும் இழப்பாக இருந்தது. இருப்பினும் இந்த மாதத்திற்குள் உலக கோப்பைக்கான அணியை இந்தியா அறிவிக்க வேண்டும். கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடும் இவர் தொடர்ந்து ரன்கள் அடிக்க தடுமாறுகிறார். ஆசிய கோப்பையில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இரண்டாவது தொடக்க ஆட்டக்காரராக காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல். ராகுல் ஆடி வருகிறார். ஆசிய கோப்பையில் பெரிய ரன்கள் அடிக்காத ராகுல் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளது.
ராகுல் அணியில் இருப்பதால் கோலியால் தொடக்க ஆட்டக்காரராக விளையாட முடியவில்லை. தற்போது ஒன் டவுன் வீரராக ஆடிவருகிறார். தற்போது பார்மிற்கு திரும்பு உள்ள கோலி மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். வழக்கத்திற்கு மாறான சூர்யகுமார் யாதவ் T20 கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார். இவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பக்கப்பலமாக உள்ளது. ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் டி20-ல் தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வருகிறார். காயத்தில் இருந்து மீண்டு ஆல்ரவுண்டராக அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார். ஐபிஎல்-ல் கலக்கிய தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டு வராத பட்சத்தில் அந்த இடத்தில் அக்ஷர் படேல் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
மேலும் படிக்க | ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்த மற்றொரு ஜாம்பவான்!
தற்போது பவுலிங்கில் புவனேஷ்குமார் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேலின் உடற்தகுதி குறித்த கேள்விக்குறிகள் இருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை படும் பட்சத்தில் அர்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஸ்பின்னர்களில் முதல் தேர்வாக இருப்பார்கள்.
கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது கூடுதல் பந்துவீச்சாளர் தேர்வு மிகவும் சவாலானதாக இருக்கும். தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அஸ்வின், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் கூடுதல் வீரராக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா அணி: (தற்காலிகமாக)
ரோஹித் சர்மா (C)
கோஹ்லி
சூர்யகுமார் யாதவ்
பந்த்
ஹர்திக் பாண்டியா
தினேஷ் கார்த்திக்
அக்ஷர் படேல்
அர்ஷல் படேல்
புவனேஷ் குமார்
பிஷ்னோய்
பும்ரா
அஷ்சதீப் சிங்
சாஹல்
கேஎல் ராகுல்
தீபக் சாஹர்
கூடுதல் வீரர்கள்:
டி. ஹூடா, எஸ். சாம்சன், சுந்தர் / ஆர். அஷ்வின்
மேலும் படிக்க | சண்டை போட்ட வீரர்களுக்கு அபராதம் -ஐசிசி அதிரடி நடவடிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ