கடந்த 2 மாதங்களாக உலக கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றுவிட்டது. இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வென்ற குஜராத் அணி முதன்முறையாகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்முறை ஐபிஎல் தொடரில் பலரது கணிப்புகள் தவறாக முடிந்தன. டாப் லிஸ்ட்டில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் மற்றும் வீரர்கள் பெரும்பாலும் இல்லை. மாறாக, லிஸ்ட்டிலேயே இல்லாத அணிகள்,  வீரர்களுக்கு டாப் இடங்கள் கிடைத்தன. நடந்து முடிந்த தொடரிலும், வழக்கம் போலவே பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.


இந்நிலையில் பெங்களூர் அணி பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்றைப் பார்க்கலாம். அதாவது இதுவரை 15 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில், ஆர்சிபி அணி மொத்தம் 6 முறை ப்ளே ஆப் வரை வந்துள்ளது. ஒரு முறை மட்டுமே ஃபைனல் சென்றுள்ளது. விஷயம் அதுவல்ல; ப்ளே ஆப் சுற்றின் நாக் அவுட்டில், ஆர்சிபி அணியை எந்த அணி தோற்கடிக்கிறதோ அந்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை.



2010 ப்ளே நாக் அவுட்டில் ஆர்சிபியை வென்றது மும்பை. ஆனால் ஃபைனலில் கோட்டைவிட்டது.
2015 ப்ளே நாக் அவுட்டில் ஆர்சிபியை வென்றது சென்னை. ஆனால் கோப்பையை வெல்லவில்லை
2020இல் ஆர்சிபியை ஐதராபாத் வெளியேற்றியது. ஆனால் ஐதராபாத்தால் அம்முறை ஃபைனலுக்குக்கூட செல்லமுடியவில்லை.



மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


அதேபோல 2021ஆம் ஆண்டு ஆர்சிபியை நாக் அவுட்டில் வெளியேற்றியது கொல்கத்தா. ஆனால் ஃபைனலில் கொல்கத்தா அணியால் வெல்லமுடியாமல் போனது. இதோ நடப்பாண்டு ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிதான் ஆர்சிபியை நாக் அவுட்டில் வெளியேற்றியது. ஆனால் கோப்பையை வெல்லமுடியாமல் குஜராத் அணியிடம் தோற்றுள்ளது ராஜஸ்தான் அணி.


மேலும் படிக்க | கப் மிஸ்ஸானாலும் இந்த விஷயத்துல மும்பைதான் இந்த தடவை சாம்பியனாம்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!