உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 44 ஆண்டுகளில் முதல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சில வாரங்களில் 25 வயதிலேயே டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை திகைக்க வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி இளம் வயதிலேயே ஓய்வை அறிவிக்கும் சாதனை டென்னிஸ் நட்சத்திரங்களின் வரிசையில் சமீபத்திய வரவு ஆஷ்லே என்றால், இதற்கு முன்பு இப்படி விளையாட்டு உலகுக்கு அதிர்ச்சியளித்த முன்னணி விளையாட்டு நட்சத்திரங்களில் சிலர்...


 மேலும் படிக்க | CSK Captain: தல தோனியின் இடத்தை நிரப்ப இவர்களே சரியானவர்கள்  


மார்டினா ஹிங்கிஸ்
1997 இல் ஹிங்கிஸ் 16 வயது மூன்று மாதங்களில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் 20 ஆம் நூற்றாண்டின் இளைய கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார். அந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் வரலாற்றில் இளம் வயதில் உலக நம்பர் ஒன் ஆக உயர்ந்தார்.


விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் வெற்றிகள் என வெற்றிப்பாதையில் நடைபோட்ட மார்டினா ஹிங்கிஸ், அதே ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். 


கணுக்கால் காயங்களுடன் போராடிய அவர், பிப்ரவரி 2003 இல் ஓய்வு பெற்றபோது அவரின் வயது 22 மட்டுமே. ஐந்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று மொத்தம் 209 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார் மார்டினா ஹிங்கிஸ் என்பது வரலாறு.



ஜார்ன் போர்க்
1970களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் ஆண்களுக்கான ஆட்டத்தில்  மேலாதிக்க சக்தியாக இருந்த ஜார்ன் போர்க், ஆறு முறை பிரெஞ்ச் ஓபனை வென்றார். அதோடு தொடர்ச்சியாக ஐந்து விம்பிள்டன் பட்டங்களையும் வென்று சாதித்தவர்.


ஆனால் அவர் திடீரென தனது 26 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஜனவரி 1983 இல் ஜார்ன் போர்க் (Bjorn Borg) அறிவித்த ஓய்வு முடிவு பலத்த விவாதங்களை ஏற்படுத்தியது.


ஓய்வு பெறுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது போட்டியாளரான ஜான் மெக்கன்ரோவிடம், அமெரிக்க ஓபனின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார், இது அவரால் வெற்றி பெற முடியாத ஒரு பெரிய போட்டியாகும்.



ஜஸ்டின் ஹெனின்


ஏழு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்குப் பிறகு 2008 இல் ஓய்வு பெறுவதற்கான அதிர்ச்சி முடிவை பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் (Justine Henin) எடுத்தபோது, ​​அவர் வயது 25 மட்டுமே.


2010 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்த ஹெனின் 2011 இல் ஓய்வு பெற்றார்.



கிம் கிளிஸ்டர்ஸ்
பெல்ஜியாவை சேர்ந்த கிம் கிளிஸ்டர்ஸ் (Kim Clijsters), மே 2007 இல் 23 வயது இளைஞனாக ஓய்வு பெற்றார், அவரது குறுகிய டென்னிஸ் வாழ்க்கையில், 2005 இல் US ஓபன் உட்பட 34 WTA ஒற்றையர் பட்டங்களை பெற்றார்.


காயங்களை எதிர்த்துப் போராடுவதும், தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியும் என பல போராட்டங்களுக்கு மத்தியில் ஓய்வை அறிவித்தார் கிம் கிளிஸ்டர்ஸ்.  


2009 மற்றும் 2011 க்கு இடையில் ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்தார், இதன் போது அவர் மேலும் இரண்டு US ஓபன்கள் மற்றும் ஒரு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.


அவர் 2020 இல் மீண்டும் மீண்டும் வந்தார், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் விளையாடவில்லை, தற்போது அவரது WTA தரவரிசை 1199 இல் உள்ளது.



ஆண்டி ரோடிக்
2012 யுஎஸ் ஓபனுக்கு முன்னதாக, 32 பட்டங்களை வென்ற 12 வருட வாழ்க்கையில் இது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று ஆண்டி ரோடிக் அறிவித்தார்.



இது அவருக்கு உலகின் நம்பர் ஒன் இடத்தையும், மூன்று விம்பிள்டன் இறுதி தோல்விகளையும் கொண்டு வந்தது - 2009 ஆம் ஆண்டு ரோஜர் ஃபெடரருடன் நடந்த  இறுதி செட் போட்டியில் 16-14 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் ஆண்டி ரோடிக் (Andy Roddick).  


மேலும் படிக்க | 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை! பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த ஜியா ராய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR