CSK Captain: தல தோனியின் இடத்தை நிரப்ப இவர்களே சரியானவர்கள்! சுரேஷ் ரெய்னாவின் தேர்வு...

IPL 2022: சிஎஸ்கே கேப்டனாக எம்எஸ் தோனிக்கு பதிலாக யார் வரலாம்?  சுரேஷ் ரெய்னா பரிந்துரைக்கும் கிரிக்கெட்டர்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 23, 2022, 06:59 AM IST
  • தோனியின் வாரிசு யார்?
  • அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்களில் ஒருவரே
  • சுரேஷ் ரெய்னாவின் பரிந்துரைகள்
CSK Captain: தல தோனியின் இடத்தை நிரப்ப இவர்களே சரியானவர்கள்! சுரேஷ் ரெய்னாவின் தேர்வு... title=

IPL 2022: கேப்டன் தோனிக்கு மற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் திறமை படைத்தவர்கள் யார் என்ற கேள்விக்கு பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் ஐபிஎல்லில் சிறந்த வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் கருத்துகள் இவை.  

ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோரில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் நான்கு முறை ஐபிஎல் வென்ற கேப்டன் எம்எஸ் தோனியின் வாரிசாக வரலாம் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறினார்.

பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் ஐபிஎல்லில் சிறந்த வீரர்களில் ஒருவரான இடது கை பேட்டர் ஜடேஜா அணியை வழிநடத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று ரெய்னா கூறினார்.

மேலும் படிக்க | ஏலம் எடுக்கப்படாமல் ஐபிஎல் விளையாடும் 3 வீரர்கள்

"ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் அணியை வழிநடத்த முடியும். அவர்கள் திறமையானவர்கள், ஆட்டத்தை நன்கு அறிந்தவர்கள், இஅவர்கள் எம்எஸ் தோனிக்கு வாரிசாக இருக்க முடியும்" என்று அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் ரெய்னா கூறினார்.  

 

 

ஐபிஎல்-ல் வர்ணனைக்கான அவரது அறிமுகத்தைப் பற்றி கேட்டதற்கு, அவர் விளையாடிய நாட்களில் தனது அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற இடது கை வீரர் ரெய்னா, வர்ணனை செய்வது உண்மையில் கடினமான வேலை என்று கூறினார்.

"இதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங் மற்றும் பியூஷ் சாவாலா ஆகியோர் ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளின்போது, வர்ணனை செய்கிறார்கள். இந்த சீசனில் ரவி சாஸ்திரியும் கூட இருப்பார். அதனால் இது எனக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் நண்பர்களிடம் இருந்து டிப்ஸ் வாங்கிக் கொள்ள முடியும்,'' என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

 

மார்ச் 26 முதல் வரவிருக்கும் ஐபிஎல் 2022க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸின் வர்ணனைக் குழுவில் ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெறுவார்கள்.

2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையையும் CSK உடன் நான்கு முறை வென்றுள்ளார்.

டி20களில் 6000 மற்றும் 8000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் ஐபிஎல்லில் 5,000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ஆவார். சாம்பியன்ஸ் லீக் டி20 வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஐபிஎல் 2022க்கான சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி (கேட்ச்), ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, மஹீஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் சிங்ஹன்ஜேகர் , டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, சுப்ரான்சு சேனாபதி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், கே பகத் வர்மா

மேலும் படிக்க | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு வரும் அதிரடி வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News