2011 உலகக் கோப்பை ஃபைனலை இந்தியா வென்றதை எப்படி மறக்கவே முடியாதோ, அதேபோல 2003 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியா தோற்றதையும் மறக்கவே முடியாது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக, இந்திய அணியின் கை வரைக்கும் வந்து நழுவிச் சென்றது அந்த உலகக்கோப்பை. கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவு சுக்குநூறாக உடைந்த அந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. ஆம், 2003ஆம் ஆண்டு இதே தேதியில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆஸ்திரேலியாவிடம் கோப்பை பறிபோனதை எப்படி மறக்கமுடியாதோ அதேபோல ஃபைனல் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் மறக்கவே முடியாது. குறிப்பாக, ரிக்கி பாண்டிங் ‘ஸ்ப்ரிங் பேட்’ மேட்டர். ஃபைனலில் இந்திய அணியைத் துவம்சம் செய்த ரிக்கி பாண்டிங், 8 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 121 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். இதையடுத்து அவர் ஸ்ப்ரிங் பேட் பயன்படுத்தினார் எனவும் அவர் அடித்த ரன்கள் கழிக்கப்பட்டு இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பை அளிக்கப்படவுள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் புரளிகள் கிளம்ப ஆரம்பித்தன.
மேலும் படிக்க | ‘அந்த’ பிளேயர்தாங்க ரொம்பப் பயம் காட்டுறாரு: கே.எல். ராகுல் ஓபன் டாக்!
நெஹ்ரா வீசிய பந்தை, ஓவர் மிட் விக்கெட் திசையில் ஒற்றைக் கையால் சிக்ஸருக்குத் தூக்கியது, கடைசி ஓவரில் ஸ்ரீநாத்தின் பந்தை அசால்ட்டாக கேலரிக்குத் தூக்கி அடித்தது என அவர் செய்த அதகளத்தைப் பார்த்தபோது, ஸ்ப்ரிங் பேட் மேட்டர் ஒருவேளை உண்மைதானோ எனவும்கூட பலருக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது. (இன்றும் கூட 90ஸ் கிட்ஸ் பலருக்கு இந்த ஸ்ப்ரிங் பேட் சந்தேகம் இருந்துவருகிறது.)
Given we've all got a bit of time on our hands as we stay at home, thought I'd go through what I've kept from my career and share some of it with everyone on a regular basis - this is the bat I used in the 2003 World Cup final. pic.twitter.com/meoBP6NJvg
— Ricky Ponting AO (@RickyPonting) March 23, 2020
இதனிடையே ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட் மேட்டர், ஏப்ரல் ஃபூலை ப்ளான் செய்து கிளப்பிவிடப்பட்ட புரளி என பின்னர் கூறப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு ரிக்கி பாண்டிங்கும்கூட ஃபைனலில் தான் பயன்படுத்திய பேட்டின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
உலகக் கோப்பை சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளைத் தொடவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அதுகுறித்த நினைவலைகளை ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR