2017-ம் ஆண்டுகான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். நேற்று இந்த தொடருக்கான போட்டி அட்டவணை  வெளியிடப்பட்டது. அதில் யார் யாருடன் எப்போது மோதுகின்றனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைபெறும் மூன்றாவது சாம்பியன் டிராபி தொடர் ஆகும். ஏற்கனவே 2004-ம் மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் போட்டியை நடத்தியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறும். 1998 -ம் ஆண்டு முதல் ஐசிசி சாம்பியன் டிராபி நடைபெற்று வருகிறது.  


இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையை வென்றவர்கள்:-


1998 -ம்  ஆண்டு  தென் ஆப்ரிக்கா கோப்பையை வென்றது. 


2000-ம் ஆண்டு நியூஸிலாந்து பட்டம் பெற்றது..


2002-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 


2004-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி மகுடம் சூடியது.


2006, 2009-ல் ஆஸ்திரேலிய அணி இருமுறை கோப்பையை தட்டிச்சென்றது.


2013-ல் இந்தியா கோப்பை வென்றது.