Team India IND vs ZIM: டீம் இந்தியா தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் பிறகு அணி ஆசிய கோப்பை போன்ற பெரிய போட்டியில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் படையைக் கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.  ஆசிய கோப்பையில் ரோஹித் தலைமையில் விளையாடுகிறது. இந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும், அணியில் ஒரு ஆபத்தான ஆல்-ரவுண்டர் சேர்க்கப்படவில்லை. இந்த வீரர் டி20 உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு இந்திய அணியின் முக்கிய அங்கமாகிவிட்டார். ஆனால் இப்போது இந்த வீரரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் - சேவாக் ஓபன் டாக்


காணாமல்போன ஆல்ரவுண்டர்


இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் 2022-க்குப் பிறகு இந்தியாவுக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் அணியில் சேர்க்கப்படவும் இல்லை. வெங்கடேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர், மிடில் ஆர்டர் மற்றும் பினிஷர் என பல்வேறு ரோல்களில் இந்திய அணியில் விளையாடி இருக்கிறார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவரின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியானது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியிருந்தாலும், அவரின் இடம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.


பாண்டியாவுக்கு வாய்ப்பு


ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2021 டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா அணிக்கு வந்த பிறகு, அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா திரும்பியதும் வெங்கடேஷ் ஐயர் வெளியேற்றத்துக்கான வழியாகவும் அமைந்தது.


மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்ல சாகும் - கபில் தேவ் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ