தோனி வளர்த்துவிட்ட 5 வீரர்கள்... இந்திய அணியின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு என்ன?
MS Dhoni 42nd Birthday: தோனி தனது கேப்டன்சியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் எனலாம். அந்த வகையில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த 5 மேட்ச் வின்னிங் வீரர்களை இங்கு காணலாம்.
MS Dhoni 42nd Birthday: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தோனி 1981ஆம் ஆண்டு, ஜூலை 7 அன்று ராஞ்சியில் பிறந்தார். அப்போது ராஞ்சி பீகார் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது, தற்போது அது ஜார்கண்டின் தலைநகராக உள்ளது.
2008ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்றார். தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு பல சவால்கள் அவர் முன் காத்திருந்தன. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்திற்கான அணியை உருவாக்குவது போன்றவை அவருக்கு பெரும் சுமையாக பார்க்கப்பட்டது.
அந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்ட தோனி, இந்திய அணிக்கு பல வரலாற்று சிறப்புமிக்க தருணங்களை வழங்கினார். தோனியின் தலைமையின் கீழ், இந்தியா ஐசிசி டி20 உலகக்கோப்பை (2007), ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகியவற்றை வென்றுள்ளது. இது தவிர, 2009ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது.
தோனி தனது கேப்டன்சியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் எனலாம். அதில், பலரும் தற்போதும் அணியில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் இந்தியாவுக்கு மேட்ச் வின்னர்களாக ஆனார்கள்.
அந்த வகையில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த 5 மேட்ச் வின்னிங் வீரர்களை இந்தியா பெறவில்லை என்றால், சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி வீழ்ச்சியடைந்திருக்கும். இன்று இந்த 5 கிரிக்கெட் வீரர்களின் சத்தம் உலக கிரிக்கெட்டில் ஒலிக்கிறது எனலாம். அவர்கள் குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | Happy Birthday Dhoni: தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் தொட கூட முடியாது!
1. விராட் கோலி
விராட் கோலி தனது கேரியரை தோனியின் கேப்டன்சியில் தொடங்கினார். "எப்போதும் அவர் தான் என்னுடைய கேப்டன்" என விராட் கூறும் அளவிற்கு தோனியின் மீதான அவரின் அபிமானம் மிகவும் பெரிது. விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்துக்கு வர வாய்ப்பளித்தவர் தோனி. கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை பார்த்த தோனி அவருக்கு டெஸ்டிலும் வாய்ப்பு கொடுத்தார். 2011-12 ஆம் ஆண்டில், விராட் கோலி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை, ஆனால் தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார்.
பின்னர் கோலியும் அரைசதம் அடித்தார். அடிலெய்டில் சதம் அடித்து விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார் கோலி. 2012இல் பெர்த்தில், கோலிக்கு பதிலாக ரோஹித்துக்கு வாய்ப்பளிக்க தேர்வாளர்கள் விரும்பினர், ஆனால் தோனி விராட் கோலியை தனது ஆடும் லெவன் அணியில் சேர்த்தார். இந்த விஷயத்தை இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தானே அப்போது நான் துணை கேப்டனாக இருந்தேன், தோனியின் விருப்பப்படி ரோஹித்துக்கு பதிலாக கோஹ்லியை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார்.
2. ரோஹித் சர்மா
ரோஹித் ஷர்மாவின் தொடர்ச்சியான மோசமான பார்மிலும் தோனி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இது அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றியது. ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியதில் தோனி மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். 2013ஆம் ஆண்டில் தோனி அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளித்ததில் இருந்து, ரோஹித் சர்மா வித்தியாசமான மாற்றத்தை கண்டார். ரோஹித் சர்மாவை ஹிட்மேனாக மாற்றியதில் தோனிக்கு பெரும் பங்கு உண்டு.
3. ரவிச்சந்திரன் அஸ்வின்
ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். ஐபிஎல் 2010இல் அஸ்வினுக்கு முதல்முறையாக விளையாட தோனி வாய்ப்பளித்தார். ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார் அஸ்வின். இவரின் திறமையை பார்த்த தோனி, பின்னர் அவரை இந்திய அணியில் சேர்த்தார். அதன் காரணமாக அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2010ஆம் ஆண்டு அணிக்கு வந்த அஸ்வின், ஓராண்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் தேர்வு செய்யப்பட்டார். அஸ்வினுக்கு டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
4. ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா இன்று இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய மூன்று விஷயங்களிலும் ஜடேஜாவிடம் எந்த குறைவும் இருக்காது. ஜடேஜாவை இந்திய அணிக்கு கொண்டு வந்ததற்கு பின்னால் தோனியின் பங்கு உள்ளது. தோனியின் கேப்டன்சியின் கீழ் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார், அவருக்கு மிகவும் பிடித்தவர் என்பதால் தோனி அவருக்கு அணியில் வாய்ப்பளித்தார். தோனி அவரை அணியில் இருந்து விலகாமல் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து வந்தார். இதன் காரணமாக ஜடேஜா சிறந்த ஆல்ரவுண்டராக உருமாறினார்.
5. சுரேஷ் ரெய்னா
மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் நட்பு சிறப்பானது. தோனி தனது கேப்டன்சியில் ரெய்னாவுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார். ரெய்னா ஒரு சிறந்த வீரர், எனவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தோனி கூறியிருந்தார். நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை என்றால், அவர் தனது இயல்பான விளையாட்டை விளையாட மாட்டார், குறைவான ரன்களில் வெளியேறுவார். தோனி ரெய்னாவுக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பளித்தார், இதன் காரணமாக வெள்ளைபந்து கிரிக்கெட்டின் மிக ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ரெய்னா உருவெடுத்தார் எனலாம்.
மேலும் படிக்க | அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ