ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும் - கிரீம் ஸ்மித்

ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கொஞ்சம் பிரேக் அவசியம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 18, 2023, 01:26 PM IST
  • ரோகித் சர்மாவுக்கு அறிவுரை
  • புத்துணர்ச்சி அவருக்கு அவசியம்
  • முன்னாள் வீரர் கிரீம் ஸ்மித் கருத்து
ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும் - கிரீம் ஸ்மித் title=

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2023, ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது கேள்விகள் எழுந்தன. அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித், ரோஹித்தின் கேப்டன்ஷிப்பை பாராட்டியிருப்பதுடன் ஒரு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

ரோகித் சர்மா என்ன செய்ய வேண்டும்?

ரோகித் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் இருக்கிறது என தெரிவித்திருக்கும் கிரீம் ஸ்மித், அவருக்கு இப்போது புத்துணர்ச்சி தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார். கேப்டனாக இருப்பவர்கள் கூடுதலாக தனிப்பட்ட ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்னறால் அவர்களின் ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த பயணத்தையும் பாதிக்கும். கேப்டனுக்கு ஒரு அழுத்தம் கூடுதலாக இருக்கும். அது ரோகித் சர்மாவுக்கும் இருக்கிறது என கூறியுள்ளார்

மேலும் படிக்க | தோனி என்னை அணியில் இருந்து தூக்கும் முன் என்ன சொன்னார் தெரியுமா? - ரகசியம் பகிரும் ரெய்னா!

கிரீம் ஸ்மித் சொல்லும் ஆலோசனை

அவர் பேசும்போது,  ரோகித் சர்மாவின் சொந்த ஃபார்மும் தொடர்ந்து சிறப்பாக இல்லை. பல வருடங்களாக ஐபிஎல்லில் பார்த்திருக்கிறோம். இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலையும் பார்த்துள்ளோம். அவர் தற்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறார். பெரும்பாலும் உங்களின் தனிப்பட்ட செயல்திறன் நன்றாக இருக்கும்போது, மற்ற விஷயங்கள் கொஞ்சம் சரியாகிவிடும். ஐபிஎல் 2023ல் கூட ரோஹித் பெரிதாக விளையாடவில்லை. அவர் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது, ​​இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்தார். 

கேப்டன்சிக்கு பாராட்டு

அவரது கேப்டன் அல்லது தலைமைத்துவத்தை யாரும் விமர்சிக்கவில்லை. இது அவரது தனிப்பட்ட செயல்திறன் பற்றியது. அவர் நல்ல ரன்கள் எடுத்தால், இதில் இருந்து விடுபடுவார். மேலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் இன்னும் நல்லது என்றும் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அம்பதி ராயுடு? பரபரக்கும் அரசியல் களம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News