அடுத்த விராட் கோலி இவர் தான் - ரோகித்சர்மா கூறும் வீரர் யார்?
இந்திய அணிக்கு அடுத்த விராட்கோலி போல் ஆடக்கூடிய இவர் தான் என ரோகித் சர்மா இளம் வீரர் ஒருவரை தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரராக பிடித்துள்ள திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். மும்பை அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய அவர், சில போட்டிகளில் அணி கவுரமான ஸ்கோரை எட்டவும் உதவினார். இவருடைய ஆட்டம் இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக ஈர்த்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக க்கோப்பைபோட்டியில் இடம் பிடித்திருந்தார்.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு சிஎஸ்கே குறிவைக்கும் மூன்று வீரர்கள்!
இவரின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. இதுவரை 12 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள திலக் வர்மா 386 ரன்களை எடுத்துள்ளார். இளம் வீரராக களம் இறங்கி ஐபிஎல் அணிக்கு அதிக ரன்களை எடுத்திருந்த ரிஷப் பன்டின் சாதனையையும் முறியடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா திலக் வர்மாவை வெகுவாக பாராட்டினார்.
ரோகித் சர்மா பேசும்போது, " திலக் வர்மா விரைவில் இந்திய அணியின் அனைத்து விதமான வீரராக உருவெடுப்பார். இது எண்ணுடைய திடமான எண்ணம். அவரிடம் இந்த மனப்பக்குவம் இருக்கிறது. நான் அவரிடம் இதனைப் பார்த்திருக்கிறேன். அவரின் விளையாட்டை பார்க்கும்போது பிரகாசமான எதிர்காலம் இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவருக்கு எழும் டவுட்டுகளை உடனுக்கு உடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். திலக் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சிறந்த வீரராக விளங்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி
மேலும் பொல்லார்டு குறித்து ரோகித் சர்மா பேசும்போது, அவர் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மும்பை அணிக்காக சிறப்பாக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் எங்களிடம் வந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம், நான் வெளியே உட்கார்ந்தாலும் பரவாயில்லை என்று கூறினார். அவரின் இந்த முடிவுக்குப் பிறகே லெவன்ஸில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அடுத்த ஆண்டுகளில் அணியில் இருக்கும் சில குழப்பங்களை சரிசெய்வது குறித்து இப்போதே கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம்" என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR