சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் சீசனில் மோசமாக விளையாடி வருகிறது. மும்பைக்கு எதிராக தோல்விக்கு பிறகு பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த ஆண்டு பிளே ஆப் கூட செல்லாமல் வெளியேறியதை எண்ணி ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுவரை விளையாடி உள்ள 12 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் புள்ளி பட்டியலில் 9வது இடத்திலும் உள்ளனர். இந்த வருடம் சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா களம் இறங்கினார். பிறகு மீண்டும் தோனி கேப்டன் பதவியை ஏற்றார். இருப்பினும் இது சென்னை அணிக்கு கை கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு பவர் புல்லாக இறங்க 3 புதிய வீரர்களை எடுக்க சென்னை திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | கே.எல். ராகுலின் திருமணம் எப்போது?
ஐபிஎல் 2023-ல் சிஎஸ்கே குறிவைக்கும் மூன்று வீரர்கள்:
1. பென் ஸ்டோக்ஸ்
சிஎஸ்கே அணி ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் இல்லாமல் திணறி வருகிறது. இதனை சரிசெய்ய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை அணியில் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. அவரால் எப்படி பட்ட போட்டியையும் தன் பக்கம் மாற்றி அமைக்க முடியும். மேலும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால், பவுலிங்கிலும் சிறந்த விளங்குவார். ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது, கேப்டன் பொறுப்பு அவரை முகுந்த சிரமத்திற்கு உள்ளாகியது.
2. சாம் கர்ரன்
ஐபிஎல்லின் முந்தைய சீசன்களில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்தவர் சாம் கரண். 2020ம் ஆண்டு சென்னை அணியில் நுழைந்த இவர் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அணிக்கு உதவ கூடிய இவர் 2022 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஐபிஎல் 2022 இலிருந்து விலக நேர்ந்தது. அவர் 32 இன்னிங்ஸ்களில் 149.78 ஸ்டிரைக் ரேட்டில் 337 ரன்களை அடித்துள்ளார். மேலும், 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
3. அக்ஷய் வாட்கர்
27 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டிராபியில் அவர் தனது அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். வாட்கருக்கு அதிக அனுபவம் இல்லை என்றாலும், அவர் 15 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 23.08 சராசரி மற்றும் 100.36 என்ற சராசரியில் 277 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார். CSK இன் கீப்பர்-பேட்டர் தேர்வாக ஜெகதீசன் இருக்கிறார். ஆனால் அவர் 2018 முதல் CSK இல் இருந்தும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | சென்னை அணியில் ஜடேஜா நீக்கமா? அணி நிர்வாகம் விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR