பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி

கைரன் பொல்லார்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்காதது குறித்த பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2022, 01:23 PM IST
  • சிஎஸ்கே போட்டியில் பொல்லார்டு களமிறங்கவில்லை
  • பொல்லார்டு களமிறங்காதது குறித்த பின்னணி
  • கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி title=

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனும், முன்னாள் சாம்பயனுமான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. நூலிழையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புடன் சென்னை அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் மும்பை அணியும் களமிறங்கின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. வழக்கமாக அம்பயர்களின் தவறுகளால் போட்டி திசைமாறும் நிலையில், சென்னை அணிக்கு மின்சாரமும் பலி எடுத்தது. வான்கடே மைதானத்தில் மின்சாரம் இல்லாததால் டிஆர்எஸ் எடுக்க முடியாமல் கான்வே விக்கெட்டை பறிகொடுக்க நேர்ந்தது. 

டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணி, சிறப்பாக பந்துவீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 97 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது. இதுவரை மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருக்கிறது. மூன்று முறையும் மும்பை அணியே சென்னை அணியை குறைவான ரன்களுக்கு சுருட்டியிருக்கிறது. இந்தப் போட்டியில் சர்பிரைஸாக மும்பை அணியில் பொல்லார்டு களமிறங்கவில்லை. அவர் களமிறங்காதது ரசிகர்களுக்கு விய்ப்பை ஏற்படுத்தியது. நேற்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய பொல்லார்டு சென்னை அணிக்கு எதிராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் படிக்க | சென்னை அணியில் ஜடேஜா நீக்கமா? அணி நிர்வாகம் விளக்கம்!

ஆனால், அவர் ஏன் களமிறங்கவில்லை? என்ற தகவலை கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்த பிறகு தெரிவித்தார். ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சூழல் எதுவும் இல்லாத நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என பொல்லார்டு தெரிவித்ததாக கூறினார். இதனால், என்னுடைய இடத்தில் புதிய வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என கூறியதாகவும் ரோகித் தெரிவித்தார். 

" மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் பொல்லார்டு. இந்தப் போட்டியில் களமிறங்காதது அவருடைய முடிவு. எங்களிடம் வந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் எனத் தெரிவித்தார். ஏனென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததல் இந்த முடிவை எடுத்திருப்பதாக" கூறினார். பொல்லார்டுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறப்பாக இருக்கவில்லை. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ஃபார்ம் இல்லாததால், ஐபில் கடைசி கட்டப்போட்டிகளில் மும்பை அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கே.எல். ராகுலின் திருமணம் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News